வார இறுதியில் மாகாணத்தின் சில பகுதிகளில் 1 மீட்டருக்கும் அதிகமான பனி குவிந்த பிறகு, Nova Scotiaவில் சுத்தம் செய்வதற்க்கு சில நாட்கள் தாமதம் ஆகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அவசரகால தயார்நிலை அமைச்சர் Harjit Sajjan கூறுகையில், பனி அகற்றும் கருவிகளை Parks Canada அனுப்பும் என்றும், உலங்கு வானூர்திகளை (helicopter)கனடிய கடலோர காவல்படை அனுப்புவதாகவும் கூறினார். மேலும் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் மனிதாபிமானப் பணிகளுக்கு உதவ உள்ளதாகவும் கூறினார்.
அத்துடன் Nova Scotiaவின் அவசரகால நிர்வாகத்திற்கு பொறுப்பான அமைச்சர் John Lohr கூறுகையில், Nova Scotia ஏற்கனவே அயல் மாகாணங்களில் இருந்து உதவியை நாடியுள்ளது, ஆனால் பொது பாதுகாப்பை பராமரிப்பதற்கு மத்திய அரசின் உதவி தேவைப்பட்டது என்று கூறினார்.
மேலும், கடுமையான பனி மற்றும் சாலை நிலைமைகள் பாதிப்பு காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சில அவசரகால சேவைகள் குறைக்கப்படலாம் என்று Nova Scotia சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.