கனடா செய்திகள்

காற்று, கனமழை, ஈரமான பனியுடன் Torontoவை நோக்கிச் வரும் புயல் – மின் தடைகள் ஏற்படும் அபாயம்

கனமழை, ஈரமான பனி மற்றும் மின் தடையை ஏற்படுத்தக்கூடிய பலமான காற்றானது Torontoவை தாக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன், புதன்கிழமை இரவு குளிர்ந்த காற்று உள்ளே நுழைவதால், மழை ஈரமான பனியுடன் கலக்கலாம். இந் நிலமை வியாழன் மாலையளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

புதன் கிழமைக்குள் 25 முதல் 50 mm வரை மழை பொழிவதுடன், மணிக்கு 70 km/h வேகத்தில் வீசும் பலமான காற்று, மின் தடையை ஏற்படுத்தக்கூடும்.

மேலும் புதன்கிழமை காற்றின் வேகம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

”அடுத்த சில நாட்கள் வாகன ஓட்டுநர்களுக்கு கடினமானதாக அமையலாம்” என CityNews வானிலை ஆய்வாளர் Jessie Uppal தெரிவித்திருந்தார்.

Related posts

மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற Joe Biden இன் அறிவிப்புக்கு Justin Trudeau பதிலளித்துள்ளார்

admin

Paris நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவினை Celine Dion நடத்தினார்

admin

April 8 அன்று Ontario வில் தோன்றவுள்ள சூரிய கிரகணம்

admin