கனடா செய்திகள்

சர்வதேச மாணவர்களின் மரணத்திற்குப் பிறகு கனடா மீண்டும் தனக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும் – இந்திய தூதர்

கனடாவில் இந்திய மாணவர்கள் சுரண்டப்படுவதை மேற்கோள் காட்டி, கனடா தனது நற்பெயரை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஒட்டாவாவாவுக்கான இந்திய தூதர் அழைப்பு விடுத்துள்ளார்.

இரு நாடுகளும் தங்கள் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதில் இந்திய மாணவர்கள் வகிக்கும் பங்கை சுரண்டல் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று உயர் ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா வலியுறுத்தினார்.

மேலும் இவர் கடந்த ஆண்டு, கனடாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் இருந்தனர். அந்த மாணவர்களின் முதன்மையான ஆதாரமாக இந்தியா உள்ளது இருப்பினும் இந்திய குடும்பங்களை ஏமாற்றிய போலி பள்ளிகளும் உள்ளன எனவும், சில மாணவர்கள் சுரண்டலுக்கு ஆளாகி இறந்ததாகவும் குறிப்பிட்டார்.

கனேடிய பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் மாகாண நிதிப் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக சர்வதேச மாணவர் ஆட்சேர்ப்புக்கு திரும்பியுள்ளன. இது பெரும்பாலும் தங்கள் படிப்புக்கு பணம் செலுத்துவதற்கு கடன்களை எடுக்கும் அல்லது தங்கள் குடும்பங்களை பெரிதும் நம்பியிருக்கும் மாணவர்களில் தங்கியுள்ளது. Conestoga கல்லூரியில் பல மாணவர்கள் முழு நேர வேலை செய்வதாக தெரியவந்துள்ளது.

Related posts

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட Toronto இனைச் சேர்ந்த பெண்ணிற்கு கனடா முழுவதும் warrant பிறப்பிக்கப்பட்டுள்ளது

admin

பிரதமர் Justin Trudeau பதவி விலக வேண்டும் என NDP தலைவர் Jagmeet Singh தெரிவிப்பு

admin

Freeland இன் பதவி விலகலுக்குப் பிறகு பிரதமர் தலைவராக இருப்பதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக Trudeau இன் former chief adviser தெரிவிப்பு

admin