கனடா செய்திகள்

Israel-Hamas போரினை நிறுத்துவதற்காக Biden கூறிய திட்டத்தை Trudeau அங்கீகரிக்கின்றார்

Israel-Hamas போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் Joe Biden முன்வைத்த முன்மொழிவுக்கு பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்ததுடன், Biden முன்வைத்த இத் திட்டமானது துன்பங்களை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதிக்கான பாதைக்கு திரும்புவதற்கான ஒரு வாய்ப்பாகும். அதை அனைத்து கட்சிகளும் கைப்பற்ற வேண்டும் எனவும் Trudeau தெரிவித்தார்.

மேலும் Trudeau உடனடியான போர்நிறுத்தம், தடையில்லா மனிதாபிமான உதவிகளில் அவசர அதிகரிப்பு மற்றும் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க கனடா அழைப்பு விடுத்துள்ளது என சமூக வலைத்தளமான X இல் பதிவிட்டுள்ளார்.

முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் முதல் கட்டம் ஆறு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும், காசாவின் அனைத்து மக்கள் அடர்த்தியான பகுதிகளிலிருந்தும் இஸ்ரேலியப் படைகள் திரும்பப் பெறுதல் மற்றும் பெண்கள் உட்பட பல பணயக்கைதிகளை விடுவிப்பது ஆகியவை அடங்கும் என்று Biden கூறினார்.

இந்த கட்டத்தில் அமெரிக்க பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், மேலும் கொல்லப்பட்ட பணயக்கைதிகளின் எச்சங்கள் அவர்களது குடும்பங்களுக்குத் திருப்பித் தரப்படும். முதல் கட்டத்தின் போது மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கும், ஒவ்வொரு நாளும் 600 டிரக்குகள் Gaza இற்குள் அனுமதிக்கப்படும்.

இரண்டாம் கட்டத்தில் ஆண் வீரர்கள் உட்பட எஞ்சியுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிப்பதும், இஸ்ரேலியப் படைகள் Gaza இல் இருந்து வெளியேற்றுவதும் அடங்கும்.

மூன்றாம் கட்டமாக Gaza இன் ஒரு பெரிய புனரமைப்புக்கு அழைப்பு விடுக்கிறது. போரினால் ஏற்பட்ட பேரழிவிலிருந்தான மறுகட்டமைப்புக்கு பல தசாப்தங்கள் தேவைப்படும்.

Related posts

Montreal துறைமுகத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட கார்கள் மீட்பு – GTA இலிருந்து திருடப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு

admin

கனடாவை 51வது நாடாக மாற்ற economic force இனைப் பயன்படுத்த போவதாக Trump மிரட்டல்

admin

சர்வதேச மாணவர்களின் சேர்க்கை federal cap இனை விட குறைவாக உள்ளது: Canada’s Universities

admin