கனடா செய்திகள்

Montreal துறைமுகத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட கார்கள் மீட்பு – GTA இலிருந்து திருடப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு

December மாத நடுப்பகுதிக்கும் March மாத இறுதிக்கும் இடையில், Montreal துறைமுகத்தில் பொலிசாரால் சுமார் 400 கப்பல் கொள்கலன்களை ஆய்வு செய்யப்பட்டதுடன் கிட்டத்தட்ட 600 திருடப்பட்ட வாகனங்கள் கண்டறியப்பட்டன, அவற்றில் பெரும்பாலானவை டொராண்டோ பகுதியைச் சேர்ந்தவை.

திருடப்பட்ட வாகனங்கள் Toronto பகுதியில் உள்ள கப்பல் கொள்கலன்களில் அடைக்கப்பட்டு, சுங்க அறிவிப்புகள் உட்பட போலியான ஆவணங்கள் வழங்கப்பட்டு, பின்னர் ரயில் அல்லது truck மூலம் துறைமுகத்திற்கு அனுப்பப்படுகின்றன என Ontario மாகாண காவல்துறை ஆய்வாளர் தெரிவித்தார்.

Project Vector இன் போது மீட்கப்பட்ட வாகனங்களில் முக்கால்வாசி Ontario இனைச் சேர்ந்தவை, இதில் 125 Peel பிராந்தியத்தைச் சேர்ந்தவை.

கப்பல் கொள்கலன்களில் scanning கருவிகளைப் பயன்படுத்துவதனால் கனடாவை விட அமெரிக்காவில் கார் திருட்டு குறைவாக காணப்படுகின்றது.

திருடப்பட்ட வாகனங்கள் கப்பல்துறைமுகங்களை அடைவதற்கு முன்பு அவற்றை மீட்டெடுப்பது முக்கியம். ஏனென்றால், திருடப்பட்ட கார்கள் நிரப்பப்பட்ட கொள்கலன் Montreal துறைமுகத்தை அடைந்தவுடன், அதைச் சரிபார்க்க போதுமான எல்லைக் காவலர்கள் இல்லை என்று எல்லை அதிகாரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜூன் மாதத்தில் மொத்த விற்பனை 0.6% குறைவு – Statistics Canada

admin

Durham இல் இடைத்தேர்தல் – பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்!

Editor

Project Odyssey இன் ஒரு பகுதியாக Peel பொலீசாரால் $33M மதிப்புள்ள திருட்டு வாகனங்கள் மீட்பு

admin