கனடா செய்திகள்

காட்டுத்தீ காரணமாக Quebec இன் அதிகபட்ச பாதுகாப்பு சிறையான Port-Cartier இனை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது

Quebec இன் Port-Cartier அருகே எரியும் காட்டுத்தீ காரணமாக உள்ளூர் அதிகபட்ச பாதுகாப்பு சிறையிலிருந்து கைதிகளை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது. வெள்ளிக்கிழமை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், பின்னர் கைதிகள் மற்ற பாதுகாப்பான கூட்டாட்சி சீர்திருத்த வசதிகளுக்கு மாற்றப்பட்டதாகவும் federal agency தெரிவித்துள்ளது.

வெளியேற்றத்தை மேற்கொள்ள எங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து எங்கள் ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் எங்கள் கவனிப்பு மற்றும் காவலில் உள்ள குற்றவாளிகளின் பாதுகாப்பையும் பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பதிவு செய்யப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டதாகவும் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ காரணமாக அவசரகால நிலையை அறிவித்ததுடன், மூன்று குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 1,000 குடியிருப்பாளர்களை வெளியேற்றவும் Côte-Nord பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகளினால் உத்தரவிடப்பட்டது.

வெள்ளிக்கிழமை முதல் காற்று திசை மாறிவிட்டதாகவும், இப்போது அதிக ஈரப்பதம் உள்ளதாகவும், Port-Cartier இல் இருந்து வடக்கு நோக்கி தீப்பிழம்புகளைத் தள்ள உதவுவதாகவும் SOPFEU செய்தித் தொடர்பாளர் Mélanie Morin கூறினார்.

வரும் நாட்களில் காற்றின் தரம் மாறக்கூடும் என்றும், புகையினால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடுவது மற்றும் கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மாகாண அரசாங்கம் வெளியேற்றப்பட்ட ஒரு வீட்டிற்கு $1,500 இழப்பீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளதுடன், மேலும் தீயை எதிர்த்துப் போராடும் நகராட்சிகளால் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்வதாகவும் கூறியுள்ளது.

Related posts

Toronto வில் குடும்ப மருத்துவர்களுக்கு பற்றாக்குறை;

Editor

கனேடியப் பெண் ஒருவர் ஆழ்கடலில் புகைப்படம் எடுத்து “உலக சாதனை” படைத்துள்ளார்.

Editor

Taiwan இல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கனேடிய, சீன பாதுகாப்பு அமைச்சர்கள் சிங்கப்பூரில் சந்திப்பு

admin