கனடா செய்திகள்

Ontarians களில் குடும்ப மருத்துவர் இல்லாதவர்களின் எண்ணிக்கை 2.5 மில்லியனை நோக்கி நகர்வு

தற்போது Ontario இல் குடும்ப மருத்துவர் இல்லாத 2.5 மில்லியன் மக்கள் இருப்பதாகவும், ஆறு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட கடைசி எண்ணிக்கையில் இருந்து இது 160,000 க்கும் அதிகமாக உள்ளதாகவும் Ontario இனை சேர்ந்த College of Family Physicians வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் தரவு புதுப்பிக்கப்படும், மேலும் நோயாளிகள் ஒரு குறிப்பிட்ட மருத்துவர் அல்லது சமூக சுகாதார மையத்துடன் தொடர்பு கொள்ளப்படாவிட்டால், அவர்களிற்கு குடும்ப மருத்துவர் இல்லை என்று கருதப்படுவார்கள். walk-in clinics மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் கவனிப்பைப் பெறுபவர்களும், primary care இனைப் பயன்படுத்தாதவர்களும் இதில் அடங்குவர். மக்கள் சிக்கலான நாள்பட்ட பிரச்சினைகள் இருக்கும்போது, walk-in clinics களினை நம்புவதை விட அர்ப்பணிப்புள்ள குடும்ப மருத்துவரைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது என கல்லூரியின் தலைவர் Dr. Jobin Varughese கூறினார்.

மேலும் Ontario இல் 670,000 பேர் தங்கள் குடும்ப மருத்துவரைப் பார்க்க 50 km க்கு மேல் பயணிக்க வேண்டும் என்று ஒரு தனி ஆய்வின் முடிவுகளையும் கல்லூரி வெளியிட்டது.

Related posts

உக்ரைனுக்கு ஆதரவாக drone தயாரிப்பதற்கும் வெடிமருந்துகளுக்கும் மில்லியன் நிதி ஒதுக்கீடு

admin

March முதல் அமுலாகிறது அமெரிக்காவின் வரி விதிப்பு

canadanews

Project Odyssey இன் ஒரு பகுதியாக Peel பொலீசாரால் $33M மதிப்புள்ள திருட்டு வாகனங்கள் மீட்பு

admin