நாட்டில் குறைந்த ஊதியம் பெறும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த புதிய வரம்புகளை அவரது அரசாங்கம் முன்மொழிந்துள்ள நிலையில், பிரதம மந்திரி Justin Trudeau கனேடியர்களை வேலைக்கு அமர்த்துமாறு வணிகங்களைக் கேட்டுக் கொண்டார். Liberals இற்கான குடியேற்றக் கொள்கையில் ஒரு முக்கிய மாற்றமான நிரந்தர வதிவிடத்திற்கான வருடாந்திர இலக்குகளைக் குறைக்கலாமா என்பதை Ottawa பரிசீலித்து வருகிறது.
கனடாவிற்கு இனி அதிக தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவையில்லை என்றும், கனேடிய நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து மலிவான தொழிலாளர்களை சார்ந்து இருப்பதை விட தொழில்நுட்பம் மற்றும் பயிற்சியில் முதலீடு செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் எனவும் திங்களன்று Halifax இன் நடைபெற்ற Liberal cabinet retreat இன் செய்தியாளர்களிடம் Trudeau தெரிவித்தார்.
வேலையின்மை விகிதம் ஆறு சதவீதம் அல்லது அதற்கு மேல் இருக்கும் பகுதிகளில் குறைந்த ஊதியம் பெறும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களுக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 26 முதல் அரசாங்கத்தால் நிராகரிக்கப்படும். மற்றும் முன்பு 20% ஆக இருந்த தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர் திட்டத்தின் மூலம் தற்போது 10% பணியாளர்களை மட்டுமே பணியமர்த்தலாம். குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கான அதிகபட்ச பணிக்காலம் இரண்டு ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அத்தோடு கட்டிடம் மற்றும் சுகாதாரம் போன்ற சில தொழில்களுக்கான விதிமுறைகளுக்கு சில விதிவிலக்குகள் இருக்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக குடியேற்றத்தால் வலுவான மக்கள்தொகை வளர்ச்சி உந்தப்பட்டு, வீட்டுவசதிக்கான தேவை அதிகரித்துள்ளது மற்றும் இது மலிவு விலையை மோசமாக்கியுள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். Refugees and Citizenship Canada இன் பொது தரவுகளின்படி 183,820 தற்காலிக வெளிநாட்டு பணியாளர் அனுமதிகள் 2023 இல் நடைமுறைக்கு வந்துள்ளன. இது 2019 இல் 98,025 ஆக இருந்தது. மேலும் இது 88 சதவீதம் அதிகரித்துள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் தற்காலிக குடியிருப்பாளர்களின் பங்கை மக்கள் தொகையில் ஐந்து சதவீதமாகக் குறைப்பதாகவும் Miller உறுதியளித்தார். ஏப்ரல் 1 ஆம் திகதி நிலவரப்படி மக்கள் தொகையில் 6.8 சதவீதத்தை தற்காலிக குடியிருப்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என கனடாவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.