கனடா செய்திகள்

Scarborough இலுள்ள Woodside Square Cinemas இல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது

சனிக்கிழமை மாலை Scarborough இல் உள்ள திரையரங்கிற்கு துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கிடைத்த புகாரின் பேரில் சுமார் 10:30 மணியளவில் Sandhurst Circle மற்றும் McCowan சாலைக்கு அருகில் உள்ள Woodside Square சினிமாவிற்கு Toronto police வந்தனர். அங்கு சென்றதும், துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான ஆதாரங்களை போலீசார் கண்டுபிடித்தனர், ஆனால் காயங்கள் எதுவும் இல்லை.

இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணியளவில், கூடுதல் துப்பாக்கிச் சூடுகளால் தாக்கப்பட்ட பின்னர், அதே தியேட்டருக்கு போலீசார் மீண்டும் அழைக்கப்பட்டனர். விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், இரண்டு சம்பவங்களின் பின்னணியில் உள்ள தொடர்பையோ நோக்கத்தையோ கண்டறிய முடியவில்லை என்றும், Toronto காவல்துறை விசாரணையில் முழுமையாக ஈடுபட்டுள்ளதுடன், guns and gang unit உன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் Duty Inspector Todd Jocko கூறினார்.

இவ் Woodside Square Cinemas ஆனது Bollywood திரைப்படங்களை முதன்மையாக ஹிந்தி மற்றும் தமிழிலும் சில ஆங்கிலத்திலும் காண்பிக்கும் ஒரு திரையரங்கமாகும்.

Related posts

நாடு முழுவதும் போதைக்கு அடிமையானவர்களுக்கு கட்டாய சிகிச்சை அளிக்க போதுமான படுக்கைகள் இல்லை – அமைச்சர் தெரிவிப்பு

admin

ஜூலை மாதத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.2% உயர்வு – கனடா புள்ளிவிவரங்கள் தெரிவிப்பு

admin

இலங்கையை சேர்ந்த 6 பேர் Berrhaven நகரில் சடலமாக மீட்பு;

Editor