கனடா செய்திகள்

leadership race இனைத் தொடர்ந்து Liberal கட்சித் தலைவர் பதவியிலிருந்து Trudeau ராஜினாமா செய்யவுள்ளார்

தலைமைப் போட்டிக்குப் பிறகு, பிரதமர் மற்றும் Liberal கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக Justin Trudeau திங்களன்று Ottawa இலுள்ள Rideau Hall இல் அறிவித்தார். இதைத் தொடர்ந்து பல மாத அரசியல் கொந்தளிப்பு முடிவுக்கு வந்தது.

குளிர்கால விடுமுறை இடைவேளையின் போது பதவி விலகுமாறு அவரது caucus இல் இருந்து அழைப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மார்ச் 24 வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைக்குமாறு Governor General Mary Simon இனைச் சந்தித்து Trudeau கேட்டுக் கொண்டார்.

கனடிய வரலாற்றில் ஒரு சிறுபான்மை அரசாங்கத்திற்கான மிக நீண்ட அமர்வுக்குப் பிறகு பாராளுமன்றம் முடக்கப்பட்ட பின்னர் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய Trudeau திட்டமிட்டுள்ளார். கட்சியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுத்த பிறகு அவர் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார்.

Freeland இன் ராஜினாமாவைத் தொடர்ந்து, Trudeau வாரக்கணக்கில் ஊடக விசாரணைகளைத் தவிர்த்தார் மற்றும் செய்தி நிறுவனங்களுடனான அனைத்து ஆண்டு இறுதி நேர்காணல்களையும் ரத்து செய்தார்.

Trudeau கனடாவின் 15வது பிரதமரான Pierre Elliott Trudeauவின் மகன் ஆவார். மேலும் இவர் 2013 முதல் கனடாவின் Liberal கட்சியின் தலைவராகவும், 2015 முதல் பிரதமராகவும் இருந்து வருகிறார். 2015 முதல் இந்த நாட்டிற்காகவும், உங்களுக்காக போராடினேன் என்று Trudeau குறிப்பிட்டார்.





Related posts

இந்த மாத இறுதியில் அல்லது February தொடக்கத்தில் $200 rebate cheques இனை அனுப்ப Ontario திட்டமிட்டுள்ளது

admin

கனடாவின் ரயில் வேலைநிறுத்தம் மூன்று பெரிய நகரங்களில் 32,000 க்கும் மேற்பட்ட பயணிகளை பாதிக்கும் 

admin

Trump இனுடைய posts இற்கு பதிலளிப்பது அரசாங்கத்தின் வேலை அல்ல என்று LeBlanc தெரிவிப்பு

admin