கனடா செய்திகள்

அமெரிக்க–கனேடிய உறவு குறித்து கனேடியர்கள் கவலை.

லிபரல் கட்சி புதிய தலைவரை தெரிவு செய்யவுள்ள நிலையில் பெரும்பாலான கனேடியர்கள் கனடா – அமெரிக்கா உறவுகளை கையாளும் கூட்டாட்சி அரசாங்கத்தின் திறன் குறித்து பெரும்பாலான கனேடியர்கள் கவலை கொள்வதாக Ottawa இன் புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிப்பதுடன் விபரல் கட்சியின் ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் Bank of Canada ஆளுநர் Mark Carney அதன் புதிய தலைவராக வேண்டுமென விரும்புவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து கணிப்பு நிறுவனமான Leger வார இறுதியில் 1,545 பேரிடம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பிலேயே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது. பதிலளித்தவர்களில் 78 சதவீதமானவர்கள் Donald Trump உடனான உறவு குறித்து கவலை வெளிப்படுத்தினர்.

Trump பதவியேற்றதும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரிகளை விதிக்கவும் எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்கவும் உறுதியளித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Bank of Canada விகிதங்களைக் குறைப்பதால், Variable mortgage rates மிகவும் பிரபலமாகி வருகின்றன

admin

குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் செல்லும்போது ​​​​அவர்களின் தடுப்பூசிகள் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

admin

கார் திருட்டை ஒரு தேசிய நெருக்கடியாகக் கருதுமாறு மத்திய அரசுக்கு காவல்துறை அழைப்பு

admin