கனடா செய்திகள்

கார் திருட்டை ஒரு தேசிய நெருக்கடியாகக் கருதுமாறு மத்திய அரசுக்கு காவல்துறை அழைப்பு

Peel பிராந்தியத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் வாகனத் திருட்டு உச்சி மாநாட்டில் கவலைகளை தெரிவித்தும் மற்றும் ,வாகனத் திருட்டு வன்முறைகள் அதிகரித்து வருவதால், அதை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு “தேசிய செயல் திட்டத்தை” உருவாக்குமாறு மத்திய அரசுக்கு காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.

“இந்த வாகனத் திருட்டுகளானது தற்போது, வீடுகளை தாக்குவது, கார் திருட்டு மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல் போன்ற விடயங்களுக்கு மாறுகின்றது” என்று Peel பிராந்திய காவல்துறையின் தலைவர் Nishan Duraiappah தெரிவித்தார்.

Peel பிராந்தியமானது தற்போது கனடாவின் வாகன திருட்டுகளின் தலைநகராக கருதப்படுகிறது, இது Brampton மேயரான Patrick Brownக்கு கவலையை ஏற்படுத்தியது.

மேலும் Brown “$1.2 பில்லியனுக்கு வடக்கே உள்ள நிதியின் காரணமாக, குற்றவியல் அமைப்புகள் இதைக் கைப்பற்றுவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொள்கின்றன” என்றும் கூறினார்.

Toronto மற்றும் Hamilton முழுவதிலும் இருந்து 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், சட்ட அமுலாக்க முகவர், காப்பீட்டு அதிகாரிகள், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் போன்றோர் கார் திருட்டுகளின் எழுச்சியை சமாளிக்க கூட்டத்தில் பங்கேற்றனர்.

Ontario’s major police forcesனுடைய கூட்டுத் தரவுகளின்படி, 2019 முதல் திருடப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 116 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் $545 மில்லியன் மதிப்புள்ள 15,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை மீட்டுள்ளனர்.

கனடாவின் முக்கிய துறைமுகங்களான Montreal மற்றும் Quebecல் பல திருடப்பட்ட வாகனங்கள் அடையாளம் காணப்படலாம் என்பதால் பொலிசார் ​​அதிக அமுலாக்கத்தையும் திரையிடலையும் நிறுவியுள்ளனர்.

Ontarioவில் திருடப்படும் ஆட்டோக்களில் 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது ” என்று முதல்வர் Duraiappah கூறினார்.

”திருடர்கள் Peel பிராந்தியத்தை குறிவைப்பதற்கான முக்கிய நோக்கம் அவர்கள் GTA ஐ விட்டு நெடுஞ்சாலை ஊடாக விரைவாக தப்பிக்க முடிவதனால்“ என காவல்துறை கூறியுள்ளது.

கடந்த ஆண்டு மாத்திரம் Peel பகுதியில் 7,400 வாகனங்கள் திருடப்பட்டுள்ளன, சராசரியாக மாதத்திற்கு 617 திருட்டுகள் நடந்துள்ளன. கூட்டுத் தரவுகளின் படி கடந்த ஆண்டில் மாத்திரம் 185 கார் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

வாகனத் திருட்டுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன, ஏனெனில் சம்பந்தப்பட்டோர் பல குற்றங்களின் ஒரு பகுதியாக உள்ளனர், மேலும் ஜாமீன் அல்லது சிறிய சிறைவாசம் பெறுபவர்கள் மீண்டும் மீண்டும் குற்றவாளிகள் ஆகின்றனர்.

“குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் வன்முறை குற்றவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர், மேலும் அவர்கள் அதிகாரிகளை ஆபத்தில் ஆழ்த்துவதோடு பொதுமக்களையும் ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள்” என்று Ontario மாகாண காவல்துறை ஆணையர் Thomas Carrique கூறினார்.

நுகர்வோர் அறிக்கைகளின் (CR) படி, ”வாகனத் திருட்டைக் குறைக்க, கார் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தில் எளிதில் காணக்கூடிய விலையுயர்ந்த பொருட்களை விட்டுச் செல்ல வேண்டாம், நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் காரை நிறுத்துங்கள், திருட்டை குறைக்க steering wheel locks இனை பயன்படுத்துங்கள். anti-theft systems ஒரு தடுப்பாக செயல்பட, உங்கள் வீட்டில் பாதுகாப்பு கேமரா மற்றும் motion-sensitive flood lightsளை பொருத்துவதன் மூலம் உதவ முடியும்” என தெரிவிக்கின்றது.

”யாராவது உங்கள் garage இனை அணுகினால் தானாகவே ஒளிரும் விளக்கு வைத்திருப்பது திருடர்களை பயமுறுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்” என்று CR உடன் Jeff Bartlettம் கூறினார்.

Related posts

Ontarians களில் குடும்ப மருத்துவர் இல்லாதவர்களின் எண்ணிக்கை 2.5 மில்லியனை நோக்கி நகர்வு

admin

கூட்டுறவு வீடுகளை உருவாக்க Liberal அரசாங்கத்தினால் $1.5B திட்டம் அறிவிப்பு

admin

மளிகைப் பொருட்களை மலிவு விலையில் விற்க உத்தரவு

admin