Pearson விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான Delta Air விமானத்தில் பயணித்த 76 பயணிகளுக்கும் 30,000 அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குவதாக Delta Air Lines உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை விமானம் தரையிறங்கிய போது ஓடுபாதையில் மோதி கவிழ்ந்தது, பின்னர் அதன் இறக்கைகள் தரையில் உரசி தீப்பற்றியது இந்த விபத்தில் 76 பயணிகளும் நான்கு பணியாளர்களும் தெய்வாதீனமாக உயிர் தப்பியிருந்தனர்.
புதன்கிழமை விமான நிறுவனம் வெளியிட்ட ஒரு பதிவில், காயமடைந்து உள்ளூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்ட 21 பயணிகளில் 20 பேர் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. அத்துடன் விமானப் போக்குவரத்து வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற Toronto சட்ட நிறுவனம் ஒன்று கனேடிய பயணிகள் இருவர் தக்கவைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியது.
விமானத்தை அகற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாக Transportation Safety Board உறுதிப்படுத்தியது. அதனடிப்படையில் புதன்கிழமை மாலை பராமரிப்புக் குழு விமானத்தை ஓடுபாதையில் இருந்து அகற்றத் தொடங்கியது. மேலும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்துவதற்காக விமானம் வேறொரு hangar இற்கு மாற்றப்படுகிறது.