கனடா செய்திகள்

Toronto பொலிசாரால் தேடப்படுகின்ற முதல் 25 தப்பியோடியோரின் பட்டியல் வெளியீடு – $1M வெகுமதி வழங்கப்படும்

Toronto காவல்துறை கனடாவின் முதல் 25 தப்பியோடியவர்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை வெளியிட்டதுடன், இந்த சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்காக $1 மில்லியன் வெகுமதியாக வழங்கப்படுவதாக நகரத்தின் காவல்துறைத் தலைவர் அறிவித்தார்.

ஒன்பது மாதங்களுக்கு முன்பு நவம்பர் 2023 இல் Toronto இனைச் சேர்ந்த Shamar Powell-Flowers கொலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதற்காக Michael Bebee உட்பட சில சந்தேக நபர்கள் முதல் 25 தப்பியோடியவர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2022 அக்டோபரில் Toronto வில் உள்ளூர் கால்பந்து நடுவரான Edwin Alvarado இனைக் கொலை செய்ததற்காக தேடப்படும் Cristian Cuxum முதல் 25 தப்பியோடியவரிற்கான பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

இந்த சந்தேக நபர்களில் ஒருவரை நீங்கள் பார்த்தால், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால் 911 இனை அழைக்குமாறு Toronto காவல்துறை தலைவர் Myron Demkiw தெரிவித்துள்ளார்.

சில முக்கிய சந்தேக நபர்களின் படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Related posts

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான மாற்றங்கள் Ottawa இனால் மேற்கொள்ளப்படுகின்றது

admin

கனடாவுக்கான தூதுவராக முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் Pete Hoekstra இனை Trump நியமித்தார்

admin

Toronto இலிருந்து Mumbai க்கு இடைநில்லா விமானங்களை வழங்குவதற்கான சேவையை Air Canada விரிவுபடுத்துகின்றது

admin