கனடா செய்திகள்

லிபரல் கட்சிக்கு அதிகரிக்கும் ஆதரவு

கடந்த December மாதத்தில் Léger கருத்துக் கணிப்பின்படி Justin Trudeau தலைமையிலான லிபரல்கள் 21 சதவீத ஆதரவைப் பெற்றிருந்த நிலையில், கன்சர்வேட்டிவ்கள் 43 சதவீத ஆதரவைக் கொண்டிருந்தனர். ஆனால் புதிய தலைவராக Carney தேர்ந்தெடுக்கப்பட்டால் லிபரல் கட்சியின் ஆதரவு 40 சதவீதமாக உயரும், அதே நேரத்தில் கன்சர்வேட்டிவ்களின் ஆதரவு 38 சதவீதமாக குறையும் என்று அந்தக்கருத்துக் கணிப்பு கூறுகிறது.

சில வாரங்களுக்கு முன்னர் அநேகமான கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் கன்சர்வேட்டிவ்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது லிபரல்களுக்கான ஆதரவு
அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

செவ்வாயன்று நடைபெற்ற Léger கருத்துக் கணிப்பில், Carney தலைமையிலான லிபரல் கட்சி கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சியின் 11 சதவீத ஆதரவையும், Bloc Québécois இன் ஐந்து சதவீத ஆதரவையும், Green Party இன் மூன்று சதவீத ஆதரவையும், People’s Party of Canada வின் இரண்டு சதவீத ஆதரவையும் பெற்றுக்கொள்ளும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை Montreal இல் நடைபெறும் இரண்டாவது விவாதத்தின் பின்னர் March 09 ஆந்திகதி லிபரல்கள் ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

$5 மில்லியன் மதிப்பிலான திருடப்பட்ட கைக்கடிகாரங்கள் தேடுதலில் மீட்பு: Toronto பொலிசார்

admin

தற்காலிக குடியேற்றவாசிகளின் எழுச்சிக்காக மத்திய அரசாங்கம் Quebec இற்கு 750 மில்லியன் டாலர்களை வழங்கவுள்ளது

admin

Latvia இல் கனேடிய வீரர் ஒருவர் off-duty இன் போது உயிரிழப்பு

admin