கனடா செய்திகள்

தற்காலிக குடியேற்றவாசிகளின் எழுச்சிக்காக மத்திய அரசாங்கம் Quebec இற்கு 750 மில்லியன் டாலர்களை வழங்கவுள்ளது

தற்காலிகமாக குடியேறுபவர்களின் அதிகரிப்புக்கு உதவியாக Quebec இற்கு $750 மில்லியன் வழங்குவதாகவும், அதே நேரத்தில் புகலிடக் கோரிக்கைகளை விரைவாகச் செயல்படுத்தவும், நாடு முழுவதும் அகதிகளாக வரக்கூடியவர்களிற்கு சிறப்பாக விநியோகிக்கவும் Ottawa உறுதியளிக்கின்றது.

இரண்டு ஆண்டுகளில் Quebec இல் உள்ள 560,000 தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. மாகாணத்தில் தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க வேண்டும் என்று Legault தெரிவித்துள்ளார்.

750 மில்லியன் டாலர் கொடுப்பனவுக்கு கூடுதலாக, Ottawa புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிப்பதாகவும், நாடு முழுவதும் உள்ள அகதிகளை மறுஒதுக்கீடு செய்வதற்கு பிற மாகாணங்களுடன் ஒத்துழைக்கவும் உறுதியளிப்பதாக federal documents தெரிவிக்கின்றன.

2017 ஆம் ஆண்டு முதல் மாகாணம் 230,000 புகலிடக் கோரிக்கையாளர்களை வரவேற்றுள்ளது. இது கனடாவிற்கு வந்திருக்கும் அகதிகளில் 50.7 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதே நேரத்தில் Quebec கனடாவின் மக்கள்தொகையில் 22 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளதாக Quebec Immigration Department தெரிவித்துள்ளது.

Related posts

Trump இனுடைய posts இற்கு பதிலளிப்பது அரசாங்கத்தின் வேலை அல்ல என்று LeBlanc தெரிவிப்பு

admin

Air Canada விமானிகள் வேலைநிறுத்தம் குறித்த அச்சத்தை நீக்கி புதிய ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பு

admin

கனடாவின் பாலஸ்தீன அங்கீரத்தை அவமானகரமானது என்கிறார் Netanyahu.

canadanews