கனடா செய்திகள்

Markham நகர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தமிழ்ப்பெண் உயிரிழப்பு

வெள்ளிக்கிழமை காலை Markham நகரில் ஒரு வீட்டிற்குள் நுழைந்து பல சந்தேக நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணும் ஒரு நாயும் உயிரிழந்ததுடன் மேலும் ஒரு ஆண் படுகாயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தவர் 20 வயதுடைய Nilakshi Raguthas என்ற தமிழ்ப்பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் 26 வயது ஆண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடி வருகின்றார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறைந்தபட்சம் இரண்டு சந்தேக நபர்களாக இருக்கலாம் எனவும் அவர்கள் புதிய வகை நான்கு கதவுகள் கொண்ட கறுப்புநிற Acura TLX காரில் தப்பிச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இது ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் என்றும் கூறும் அதிகாரிகள் மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் towing industry உடன் தொடர்புடைய தொழிலை மேற்கொள்பவர் என்றும் இச்சம்பவமும் அவருடைய தொழிலுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்தவருடமும் Markham நகரிலிருந்து துப்பாக்கிச்சூடு சம்பந்தப்பட்ட பல முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றதாகவும் அதன் பின்னர் தமது புலனாய்வாளர்கள் குறித்த பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வரும் நிலையிலேயே இச்சம்பவமும் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

Trudeau மற்றும் பிற கூட்டாட்சி தலைவர்களுக்கு online கொலை மிரட்டல்கள் விடுத்ததாக இரண்டு Albertans மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

admin

இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் கனடாவின் மக்கள் தொகை 430,000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

Editor

March மாத இறுதியில் தேர்தலை நடத்துமாறு NDP தலைவர் வலியுறுத்துகின்றார்

canadanews