கனடா செய்திகள்

கனடாவில் Flu தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை.

கனடாவில் Flu காய்ச்சலுக்கான காலம் தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கனடாவில் Flu காய்ச்சலுக்கான காலம் தொடங்கியுள்ளது.

சமீபகாலமாக தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனவே தடுப்பூசி போட்டுக்கொள்ள திட்டமிட்டுள்ள நபர்களுக்கு இது சரியான நேரம் என மருத்துவர் Allison McGeer தெரிவித்துள்ளார்.

மேலும் டிசம்பர் மாத இறுதி மற்றும் ஜனவரி முதல் வாரங்களில் எண்ணிக்கை அதிரிக்கும் என்றும், நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து இரண்டு வாரங்களுக்குள் சரியாகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாகாணத்தை பொறுத்தும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வேறுபடுவதும் தெரியவந்துள்ளது.

Related posts

பிரதமர் Justin Trudeauஐ ராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுக்கும் கடிதத்தில் கையெழுத்திட்டதை பகிரங்கமாக உறுதிப்படுத்திய MP

Canadatamilnews

Ontarioவில் வீடு கட்டுமான பணிகள் உயர்ந்துள்ளன இருப்பினும் 1.5M இலக்கை அடைய வெகு தொலைவில் உள்ளது

admin

Liberal அரசாங்கம் மூன்றாவது Conservative நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தப்பிப்பிழைத்தது

admin