கனடா செய்திகள்

கனடாவில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையரின் பிள்ளைகள் இருவர் மல்யுத்தப் போட்டியில் சாதனை;

தமிழ் கனேடிய உடன்பிறப்புகள் இருவர் 2024 தேசிய மல்யுத்த போட்டியில் வெற்றியாளர்களாக தெரிவாகியுள்ளனர்.

மார்ச் 14 ஆம் தேதி ஆரம்பமான 2024 ஆம் ஆண்டிற்கான 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கனேடிய மல்யுத்த போட்டியில், தமிழ் உடன்பிறப்புகளான ஆஹரன் பிரனவன் மற்றும் அட்சயா பிரனவன் ஆகியோர் தேசிய ரீதியில் வெற்றியாளர்களாகியுள்ளனர்.

கனேடிய உயர்நிலைப் பாடசாலை மாணவர்களாகிய இரு உடன்பிறப்புகளும், Durham மல்யுத்த குழுவின் அங்கத்தவர்கள் ஆவர்.

இவர்களில் அட்சயா பிரனவன் 49 கிலோ பிரிவிலும், ஆஹரன் பிரனவன் 51 கிலோ பிரிவிலும் போட்டியிட்டனர்.

இவர்களுள் ஆஹரன் அவரது 4 வயதிலேயே மல்யுத்தப்யணத்தைப் தொடங்கியதுடன் மூன்று தடவைகள் Pan American grappling முறை போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்.

இதேவேளை அட்சயா பிரனவன் கடந்த ஆண்டில் நடைபெற்ற மல்யுத்தப்போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் உடன்பிறந்தவர்கள் இருவரும் கல்விதுறையிலும் வல்லவர்களாக இருப்பதும் பெருமைக்குரிய விடயமாகும்.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற இலங்கையர்களின் பிள்ளைகள் இவ்வாறு சாதித்து காட்டியுள்ளமை புலம்பெயர் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.

Related posts

மளிகைப் பொருட்களை மலிவு விலையில் விற்க உத்தரவு

admin

பிளாஸ்ரிக் பயன்பாடு தொடர்பாக மத்திய அரசாங்கத்தின் கண்காணிப்பு அறிக்கை

Canadatamilnews

கடைசி நிமிட கோரிக்கையை முன்னிட்டு அடுத்த வாரம் Haiti யை நோக்கிய விமானத்துற்கு ஏற்பாடு

admin