கனடா செய்திகள்

முதன்மை சுகாதார பாதுகாப்பு கடைபிடிக்கப்படுகின்ற முதல் 10 நாடுகளில் கனடா கடைசி இடத்தில் உள்ளது – அறிக்கை வெளியீடு

Canadian Institute for Health Information இனால் கடந்த வியாழன் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி உயர் வருமானம் கொண்ட 10 நாடுகளின் பட்டியலில், ஆரம்ப சுகாதார சேவைக்கான அணுகலில் கனடா கடைசி இடத்தில் உள்ளது.

Commonwealth Fund இனால் 2023 நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட கனேடியர்களில் 86 சதவீதம் பேர் தங்களுக்கு ஒரு மருத்துவர் அல்லது மருத்துவ பராமரிப்புக்காக வழக்கமாகச் செல்லும் இடம் இருப்பதாகக் கூறியுள்ளனர். இது 2016 இல் கணக்கெடுக்கப்பட்டவர்களில் 93 சதவீதத்திலிருந்து குறைந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஆய்விலிருந்து ”நான்கு மில்லியன் கனேடிய பெரியவர்களுக்கு முதன்மை சிகிச்சைக்கான அணுகல் இல்லை” என்று கூறுகிறது.

முதன்மை சிகிச்சைக்கான அணுகலைப் பெற்றவர்களின் சதவீதம் “ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, UK மற்றும் அமெரிக்கா” போன்ற நாடுகளை விட குறைவாக உள்ளது.

நெதர்லாந்து சிறந்த தரவரிசையைப் பெற்றுள்ளது, அங்கு வசிக்கும் 99 சதவீத பெரியவர்கள் 2023 இல் முதன்மை பராமரிப்புக்கான அணுகலைப் பெற்றதாகக் கூறியுள்ளனர்.

கனடாவை விட அமெரிக்கா சற்று சிறப்பாக செயல்பட்டுள்ளது,ஏனெனில் 87 சதவீத அமெரிக்க பெரியவர்கள் தங்களுக்கு முதன்மை பராமரிப்பு அணுகல் இருப்பதாக கூறியுள்ளனர்.

ஒரு மருத்துவர் அல்லது தாதியரைப் பார்க்க அதே அல்லது அடுத்த நாள் சந்திப்பைப் பெறவதிலும் கனடா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

கனேடிய வயதானவர்களில் 26 சதவீதம் பேர் மட்டுமே விரைவாக மருத்துவ சிகிச்சை பெற முடிகின்றது, இது 2016 இல் 46 சதவீதமாக இருந்துள்ளது.

அதிக வருமானம் உள்ளவர்களைக் காட்டிலும் குறைந்த குடும்ப வருமானம் கொண்ட கனேடியர்கள் முதன்மை பராமரிப்பு வழங்குநரைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும் கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த அறிக்கையானது முதன்மை பராமரிப்பு இல்லாத கனேடியர்களில் 39 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு நாள்பட்ட உடல் உபாதையை கொண்டிருப்பதையும், 29 சதவீதம் பேர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்வதையும் கண்டறிந்துள்ளது.

2023ல் Commonwealth Fund மனநலம் குறித்து ஆய்வு செய்தது. இதன் போது ”2023 ஆம் ஆண்டில் 29 சதவீத பெரியவர்கள் மனச்சோர்வு, பதட்டம் அல்லது பிற மனநல பிரச்சனைகளைப் பற்றி புகாரளித்த நிலையில், COVID-19 தொற்றுநோயானது பொருளாதார அழுத்தங்களுடன் சேர்ந்து, கனேடியர்களை பாதிக்கிறமை” தெரியவந்தது.

Related posts

ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் Toronto இன் தெருக்கள் தாக்கப்பட்டது

admin

Toronto இன் Port Lands இல் ஏற்ப்பட்ட தீ விபத்தில் காயங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை

admin

மலிவு விலையில் வீடுகள் இல்லாமையினால் Ontarioவின் நிதியுதவியை நிறுத்தி வைப்பதாக மத்திய வங்கிகள் அச்சுறுத்தல்

admin