கனடா செய்திகள்

Ford அரசாங்கமானது Ontarioவில் எரிவாயு வரி குறைப்பை 2024 வரை நீட்டிக்கவுள்ளது

Ontario அரசாங்கமானது எரிவாயு மற்றும் எரிபொருள் வரி விகிதக் குறைப்புகளை டிசம்பர் 31, 2024 வரை நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Premier Doug Ford ஆனது ஜுலை 1, 2022 முதல் ஜூன் 30, 2024 வரை எரிவாயு வரியை லிட்டருக்கு 5.7 centsக்கும், எரிபொருள் (டீசல்) வரியை லிட்டருக்கு 5.3 centsக்கும் தற்காலிகமாக குறைத்துள்ளது.

திங்கட்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பின் படி இந்த ஆண்டு இறுதி வரை விலைகள் லிட்டருக்கு ஒன்பது cents ஆக இருப்பது உறுதி செய்யப்பட்டது, மேலும் ”வரி விகிதக் குறைப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இரண்டரை ஆண்டுகளில் Ontario குடும்பங்களுக்கு சராசரியாக $320 சேமிக்கப்படும்” என்று Premier Ford கூறுகிறது.

“மத்திய அரசாங்கம் அதன் விலையுயர்ந்த கார்பன் வரியை அதிகரிக்கவிருக்கும் நிலையில், நிவாரணம் வழங்குவதும், நூற்றுக்கணக்கான டாலர்களை மக்களின் பாக்கெட்டுகளில் மீண்டும் நிரப்புவதும் முக்கியமான செயல்களாக தோன்ற இல்லை. அதனால் தான் நாங்கள் எங்கள் எரிவாயு வரி குறைப்பை நீட்டிக்கிறோம்.” என்று Premier Ford தெரிவிகின்றது.

“ஏப்ரல் 1, 2024 அன்று திட்டமிடப்பட்ட 23 சதவீத கார்பன் வரி உயர்வை ரத்து செய்வதன் மூலம் எங்களுடன் சேருமாறு மத்திய அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன், இது Ontario குடும்பங்களின் வாழ்க்கையை மட்டுமே விலை உயர்ந்ததாக மாற்றும்.”

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட, 2024 spring budget மூலம் முன்மொழியப்பட்ட சட்டத்தை Ford அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது.

“அதிக பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் Ontario தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் கடின உழைப்பால் சம்பாதித்த ஊதியத்தை பாதிக்கிறது என்பதை எங்கள் அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளது” என்று Ontarioவின் நிதி அமைச்சர் Peter Bethlenfalvy கூறினார்.

மேலும் அவர் “அதனால்தான் செலவுகளைக் குறைக்க நாங்கள் முன்கூட்டியே செயல்பட்டோம், மேலும் எங்கள் சமீபத்திய எரிவாயு வரிக் குறைப்புகளுடன் pump இல் உள்ள Ontario குடும்பங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்போம்.” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

கனேடியர்களின் கடவுச்சீட்டுக்களை இணையவழியில் புதுப்பிப்பதாக அறிவித்திருந்த போதும் இதுவரையில் நடைமுறைக்கு உட்படுத்தப்படவில்லை.

Editor

எரிவாயு விலையில் ஏற்ப்பட்டுள்ள மெதுவான வளர்ச்சி – June மாதத்தில் பணவீக்கம் 2.7% ஆக குறைவு

admin

CSIS இயக்குனரான David Vigneault 7 வருடங்களிற்கு பின் பணியில் இருந்து விலகுகின்றார்

admin