கனடா செய்திகள்

Hydro வெடிப்பினால் இரண்டு தொழிலாளர்கள் படுகாயம்: நூற்றுக்கு மேற்ப்பட்டடோர் மின் தடையால் அவதி

Lake Shore Boulevard மற்றும் Don Roadway பகுதிகளில் உள்ள hydro vault இற்கு சனிக்கிழமை 12:55 a.m அளவில் பணியாளர்களுக்கு அழைப்பு வந்தது, அதில் vault இலிருந்து இலேசான புகை மற்றும் மூடுபனி வருவதாகக் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை hydro vault இல் ஏற்ப்பட்ட வெடிப்பால் மின் வெட்டு ஏற்ப்பட்டுள்ளது. Distillery மாவட்டத்தை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் இம் மின்வெட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவருக்கு கடுமையான காயங்கள் ஏற்ப்பட்டுள்ளதுடன் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் மற்றொருவர்க்கு சிறிய காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து தொழிலாளர் அமைச்சகம் விசாரணை நடத்தி வருவதாகவும், மின் வெட்டானது ஒரே இரவில் சீரமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Lebanon இல் வன்முறை அதிகரித்து வருவதால், கனேடியர்கள் விரைவில் வெளியேறுமாறு Ottawa அறிவுறுத்தல்

admin

கனடாவில் சராசரியாக கேட்கப்படும் வாடகை May மாதத்தில் $2,202 இனை எட்டியுள்ளது

admin

Rafah தாக்குதல் தொடர்பில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு

Editor