Caribbean நாட்டிற்கு செல்வதற்கான கோரிக்கைகள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், அடுத்த வாரம் Haiti இலிருந்து கூடுதல் விமானங்களை அனுப்பவுள்ளதாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. கடைசி திட்டமிடப்பட்ட விமானத்திற்கான கோரிக்கைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
அரசாங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட கும்பல் வன்முறை மற்றும் உணவு, மருந்து பற்றாக்குறையுடன் போராடுபவர்களை உள்ளடக்கிய விமானம் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டவுள்ளது. இது மூன்றில் கடைசி விமானமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதன் கிழமை அனுப்பப்பட்ட விமானத்தை தொடர்ந்து வெள்ளிக்கிழமையும் பின் மேலதிக விமானம் ஞாயிற்றுக்கிழமையும் அனுப்பப்படவுள்ளது.
அடுத்த வாரம் செல்லவுள்ள விமானம் அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்யும் எனவும், வெளியேற்றத்திற்கான கோரிக்கைகளை தாம் தொடர்ந்து கவனிப்பதாகவும் இதன் பின் மேலதிக விமானங்களின் தேவை இருக்காது எனவும் விவகார அமைச்சர் Joly குறிப்பிட்டார்.