கனடா செய்திகள்

2024 கணக்கெடுப்பில் AI இற்காக $2.4 பில்லியன் முதலீடு – Trudeau அறிவிப்பு

2024 இற்கான வரவு செலவு கணக்கில் செயற்கை நுண்ணறிவில் (AI) $2.4 பில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது. AI துறையில் வேலை வளர்ச்சியை விரைவுபடுத்துவதன் மூலம் AI இன் முழு திறனையும் பயன்படுத்த இந்த முதலீடு உதவும் எனவும், AI இன் உதவியுடன் ஆராய்ச்சி மற்றும் வணிக உற்பத்தியை அதிகரிக்க முடியும் எனவும் பிரதம மந்திரி Justin Trudeau குறிப்பிட்டுள்ளார்.

இந் நிதியானது பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்படும். இதில் $2 பில்லியன் தொகையானது கனேடிய AI ஆராய்ச்சியாளர்கள், start-ups மற்றும் தொழில் விரிவாக்கத்திற்குச் செல்லும், அத்தோடு AI Commute Access Fund தொடங்கப்படுவதன் மூலம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவை வழங்க முடியும்.

இந் நிதியில் $200 மில்லியனானது பிராந்திய மேம்பாட்டு முகாமைகள் மூலம் விவசாயம், சுகாதாரம், சுத்தமான தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி போன்ற புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், $100 மில்லியனானது AI Asset Program மூலம் சிறிய முதல் நடுத்தர அளவிலான வணிகங்கள் ஆராய்ச்சி மற்றும் சோதனை வேலைகளுக்காகவும், $50 மில்லியனானது Sectoral Workforce Solutions Program இற்கும், மேலதிக $5.1 மில்லியனானது செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கும் அமலாக்குவதற்காகவும் செலவிடப்படவுள்ளது.

Related posts

Toronto பொலிசாரால் தேடப்படுகின்ற முதல் 25 தப்பியோடியோரின் பட்டியல் வெளியீடு – $1M வெகுமதி வழங்கப்படும்

admin

Montreal துறைமுகத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட கார்கள் மீட்பு – GTA இலிருந்து திருடப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு

admin

NATO அமைப்பில் 7 வது பெரிய பங்காளராக – கனடா

Editor