கனடா செய்திகள்

Liberal அரசாங்கம் வாகனத் திருட்டுகளிலிருந்து விடுபடவில்லை – கடந்த ஆண்டுகளில் 48 வாகனங்கள் திருட்டு

புதிய தரவுகளின் படி ஜனவரி 2016 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை 48 அரசு வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. மேலும் நீதி அமைச்சரின் உத்தியோகபூர்வ வாகனம் 2021 முதல் 2023 வரை பல வருடங்களில் மூன்று முறை திருடப்பட்ட நிலையில், திருடர்களிடமிருந்து தனது சொந்த வாகனங்களைப் பாதுகாக்க அரசாங்கம் போராடுகிறது.

திருடப்பட்ட நான்கு டஜன் வாகனங்களில் இரண்டு முறைக்கு மேல் திருடப்பட்டவை என்றும், 34 மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆவணங்கள் கூறுகின்றன.

2021 மற்றும் 2023 க்கு இடையில், திருடப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை Ontario இல் 48 சதவீதமும், Quebec இல் 58 சதவீதமும், Atlantic Canada இல் 34 சதவீதமும் உயர்ந்துள்ளது.

திருடப்பட்ட வாகனங்களில் மூன்றில் ஒரு பங்கு கனடாவிற்குள் மறுவிற்பனை செய்யப்படுவதுடன், பெரும்பாலான திருடப்பட்ட வாகனங்கள் நாட்டிற்கு வெளியே அனுப்பப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் கொள்கலன்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

Pablo Rodriguez அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தமையால் Trudeau Liberals இற்கு மேலும் சேதம் ஏற்பட்டது

admin

கனடாவின் காலாண்டு மக்கள்தொகை வளர்ச்சி 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதன் மெதுவான வேகத்தை எட்டியுள்ளது

admin

Waterloo பிராந்தியதிலுள்ள chop கடையொன்றில் GTA இலிருந்து திருடப்பட்ட $4M மதிப்புள்ள வாகனங்கள் மீட்பு

admin