National Advisory Committee ஆனது அனைத்து குழந்தைகளுக்குமான சுவாச ஒத்திசைவு வைரஸ் அல்லது RSV க்கு எதிரான உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தை பரிந்துரைப்பதுடன், அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களின் முதல் RSV சீசனுக்கு முன் Nirsevimab என்ற நோயெதிர்ப்பு மருந்தை வழங்குவதற்கு மாகாணங்களும் பிரதேசங்களும் செயல்பட வேண்டும் என்றும் கூறுகிறது.
ஒரு உலகளாவிய திட்டத்தை இப்போதே செயல்படுத்துவதற்கான விலை மற்றும் இவ் antibody இற்கான அணுகல் தடையாக இருந்தால், அதிக ஆபத்துள்ள குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக RSV நோயால் கடுமையாக நோய்வாய்ப்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ள குழந்தைகளில், முன்கூட்டியே பிறந்தவர்கள், சில மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் மற்றும் நெரிசலான சூழ்நிலைகளில் அல்லது பிற அதிக ஆபத்துள்ள அமைப்புகளில் வாழும் குழந்தைகள் இதில் அடங்கும்.
கர்ப்பிணிகள் மற்றும் அவர்களின் உடல்நலப் பாதுகாப்பு வழங்குநர்கள் RSVpreF அல்லது Abrysvo என்ற தடுப்பூசியைப் பரிசீலிக்கலாம்.