ஜூன் 27 அன்று குழந்தைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு கூட்டாட்சி பல் மருத்துவத் திட்டத்திற்கான தகுதியை விரிவுபடுத்துவதாகவும், சுமார் 1.2 மில்லியன் மக்களுக்கு தகுதி நீட்டிக்கப்படும் என்றும் Liberal அரசாங்கம் தெரிவிக்கின்றது.
18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் ஊனமுற்றோர் வரிக் கடன் பெறும் நபர்கள் இந்த திகதியில் விண்ணப்பிக்க முடியும் என Citizens’ Services Minister ஆன Terry Beech தெரிவித்தார். மேலும் இதற்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் காப்பீடு செய்யப்படாதவர்களாகவும், குடும்ப வருமானம் ஆண்டுக்கு $90,000க்கு கீழும் இருக்க வேண்டும்.
ஜனவரி 2025 இல் அந்த அளவுகோலைப் பூர்த்தி செய்யும் அனைவரையும் சேர்ப்பதற்கான தகுதி முழுமையாக விரிவுபடுத்தப்படும்.