கனடா செய்திகள்

Toronto இலிருந்து Mumbai க்கு இடைநில்லா விமானங்களை வழங்குவதற்கான சேவையை Air Canada விரிவுபடுத்துகின்றது

Toronto இலிருந்து Mumbai க்கு புதிய இடைவிடாத சேவை உட்பட, இந்த ஆண்டு இந்தியாவுக்கான தனது விமானங்களை விரிவுபடுத்துவதுடன், தனது சேவையை Montreal இல் இருந்து Delhi க்கு தினசரி விமானங்களுக்கு உயர்த்துவதாக Air Canada தெரிவித்துள்ளது.

அக்டோபர் 27 முதல் வாரத்திற்கு நான்கு முறை விமானங்கள் இயக்கப்படும் என்றும், மேற்கு கனடாவில் இருந்து பயணிப்பவர்களுக்கு அக்டோபர் 27 முதல் லண்டன் வழியாக Calgary இல் இருந்து டெல்லிக்கு தினசரி பருவகால விமானங்களை வழங்குவதாகவும் விமான நிறுவனம் கூறுகிறது.

இந்த குளிர்காலத்தில் Vancouver இல் இருந்து லண்டன் செல்லும் விமானங்களும் டெல்லிக்கு செல்லும் விமானங்களுடன் வசதியாக இணைக்கப்படும். மொத்தத்தில், இந்தியாவிற்கு 25 வாராந்திர விமானங்களை இயக்குவதாக Air Canada தெரிவித்துள்ளது.

Related posts

Toronto வாகன திருட்டு காப்பீடு கோரிக்கைகள் 2018 முதல் 561 சதவீதம் அதிகரிப்பு – Ontario இல் $1B இற்கும் அதிகமான உரிமைகோரல்

admin

கனடாவின் மக்கள்தொகை 63 மில்லியனை எட்டும் என கணிப்பு – 85 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரிப்பு

admin

Barrhaven நகரில் 6 இலங்கையர்களை கொலை செய்த சந்தேக நபர் இன்று Ottawa நீதி மன்றில் முன்னிலை;

Editor