கனடா செய்திகள்

Toronto வாகன திருட்டு காப்பீடு கோரிக்கைகள் 2018 முதல் 561 சதவீதம் அதிகரிப்பு – Ontario இல் $1B இற்கும் அதிகமான உரிமைகோரல்

கடந்த சில ஆண்டுகளாக Greater Toronto பகுதியிலும், Ontario முழுவதிலும் வாகனத் திருடினால் ஏற்படும் காப்பீட்டுக் கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. Toronto இல் வாகனத் திருட்டு உரிமைகோரல்கள் 2018 இல் 56 மில்லியன் டாலரில் இருந்து 2023 இல் கிட்டத்தட்ட 372 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது 561 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு Ontario இல் வாகனத் திருட்டு உரிமைகோரல்கள் முதன்முறையாக $1 பில்லியனை எட்டியதன் மூலம், இது மாகாணம் முழுவதும் உள்ள அதிகரிப்புடன் ஒத்துப்போகிறது. இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 524 சதவீதம் அதிகமாகும் என Insurance Bureau of Canada (ICB) தெரிவித்துள்ளது.

வாகன திருட்டு உரிமைகோரல்களின் மொத்த மதிப்பைப் பொறுத்தவரை, Ontario நகரங்களின் பட்டியலில் Toronto தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து Brampton இன் உரிமைகோரல்கள் 2018 முதல் 719 சதவீதம் உயர்ந்து கடந்த ஆண்டு $93 மில்லியனை எட்டியது. Mississauga 533 சதவீதம் உயர்ந்து கிட்டத்தட்ட $90 மில்லியன் மதிப்புள்ள உரிமைகோரல்களை எட்டியது, அதே சமயம் Vaughan இல் 789 சதவீதம் உயர்ந்து 62 மில்லியன் டாலர்களுக்கும், Markham இல் 989 சதவீதம் $43.6 மில்லியனுக்கும் உயர்ந்தது.

GTA முழுவதிலும் உள்ள பொலிஸ் சேவைகள் கடந்த ஆண்டு அதிகரித்து வரும் வன்முறை வாகனத் திருட்டுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளன. வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மாகாணத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருடப்பட்டு, பிற வகையான குற்றச் செயல்களுக்கு நிதியளிக்கும் ஒரு அதி நவீனத் தொழிலாக மாறிவிட்டதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Related posts

முன்னாள் B.C. பிரதமர் John Horgan அவரது 65 ஆவது வயதில் காலமானார்

admin

திங்களன்று Toronto, GTA இல் 10cm வரை பனி காணப்படலாம்

admin

வீட்டு வசதி, வரி போன்றவற்றிற்கு Federal கணக்கெடுப்பில் முன்னுரிமை – $39.8B நிதி பற்றாக்குறை

admin