கனடா செய்திகள்

வீட்டு வசதி, வரி போன்றவற்றிற்கு Federal கணக்கெடுப்பில் முன்னுரிமை – $39.8B நிதி பற்றாக்குறை

2024 ஆம் ஆண்டிற்கான Federal கணக்கெடுப்பில் இளைஞர்களுக்கான விளையாட்டுக் களத்தை நிறுவுதல், நாட்டின் வீட்டுவசதி மற்றும் சமூக ஆதரவை மேம்படுத்தல் போன்றவற்றிற்காக கனடாவில் அதிக வருமானம் ஈட்டுபவர்களிடம் அரசாங்கம் புதிய வரிகளை விதித்துள்ளது.

2024 இற்கான Federal கணக்கெடுப்பில் கடன் அடிப்படையிலான மற்றும் மாகாண கொள்முதல் சார்ந்த $52.9 பில்லியன் செலவுத் திட்டங்கள் உள்ளன. அத்துடன் புகையிலை மற்றும் vaping வரிகள் உட்பட $20 பில்லியன் வருவாய் உள்ளது.

கனடாவின் அதிக வருமானம் ஈட்டுபவர்களின் மீதான வரி அடுத்த 5 ஆண்டுகளில் $19.3 பில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கனடாவின் நடுத்தர வர்க்கத்தினர் மீது வரிகளை உயர்த்த மாட்டோம் என்றும் இந்த மாற்றம் 99.87 சதவீத கனேடியர்களை பாதிக்காது என்றும் Liberals அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Conservative அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை Trudeau தனது செலவுத் திட்டங்களை தயவுசெய்து நிறுத்துமாறு Conservative தலைவர் Pierre Poilievre குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Canada Post வேலைநிறுத்தத்தில் தலையிடுமாறு தொழிலாளர் வாரியத்திடம் Feds கோரிக்கை விடுப்பு

admin

Christmas இன் போது Wayne Gretzky இனை பிரதமர் பதவிக்கு போட்டியிடுமாறு Donald Trump கேட்டுக்கொண்டார்

admin

நாடு முழுவதும் போதைக்கு அடிமையானவர்களுக்கு கட்டாய சிகிச்சை அளிக்க போதுமான படுக்கைகள் இல்லை – அமைச்சர் தெரிவிப்பு

admin