WestJet mechanics இன் திடீர் வேலைநிறுத்தம் காரணமாக அடுத்த மூன்று நாட்களில் 82 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கூடுதல் விமானங்கள் நிறுத்தப்பட்டு வருவதாகவும், ஞாயிற்றுக்கிழமை இறுதிக்குள் அதன் முழு வலையமைப்பிலும் 30 விமானங்கள் மட்டுமே இயங்கும் என்று நிறுவனத்தால் சனிக்கிழமை பிற்பகுதியில் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
எந்த நாளிலும் இல்லாத அளவுக்கு சனிக்கிழமை 282 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை 68 விமானங்களும், திங்கள்கிழமை 11 விமானங்களும், செவ்வாய்கிழமை மூன்று விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கூடுதல் ரத்து செய்யப்படுமா என்பது உடனடியாகத் தெரியவில்லை. வரும் நாட்களில் விமான நிறுவனத்தில் பயணிக்கத் தயாராக இருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் விமானத்தின் நிலையைச் சரிபார்க்க வலியுறுத்தப்பட்டனர். மேலும் இவ் தொழிலாளர் நடவடிக்கையால் 49,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.