கனடா செய்திகள்

உலகளாவிய ரீதியில் ஏற்ப்பட்ட IT செயலிழப்பைத் தொடர்ந்து கனடாவின் விமான நிலையங்கள், மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மீண்டும் தொடக்கம்

Microsoft Windows இனைப் பயன்படுத்தும் கணினிகளில் தவறான புதுப்பித்தலால் ஏற்பட்ட உலகளாவிய தொழில்நுட்ப செயலிழப்பிலிருந்து மீண்டும் கனடா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் போலீஸ் சேவைகள் சனிக்கிழமையன்று படிப்படியாக இயல்பான செயல்பாடுகளுக்குத் திரும்பியது.

இந்த தடுமாற்றமானது ஒரு பாதுகாப்பு சம்பந்தமானதோ அல்லது cyberattack ஓ இல்லை. Microsoft Windows இல் இயங்கும் கணினிகளில் ஒரு தவறான update இனைப் பயன்படுத்தியதன் விளைவாக ​​உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை இத் தடுமாற்றம் ஏற்ப்பட்டதாக Cybersecurity நிறுவனமான CrowdStrike தெரிவித்துள்ளது.

CrowdStrike இன் update ஆனது 8.5 மில்லியன் Windows சாதனங்களை பாதித்துள்ளது. இப் பாதிப்பானது அனைத்து Windows சாதனங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானது என operating system security இன் துணைத் தலைவரான David Weston குறிப்பிட்டுள்ளார்.

இச் செயலிலப்பின் விளைவாக British Columbia இன் மருத்துவமனைகள் மற்றும் அங்குள்ள் ஊழியர்கள் ஆய்வக வேலை மற்றும் உணவு orders இனை நிர்வகிப்பதற்கான காகிதத்திற்கு மாறினார்கள். அத்தோடு அவசரகால தகவல்தொடர்புகளில் பெரும் இடையூறு ஏற்பட்டதாக Edmonton பொலிசார் தெரிவித்துள்ளனர். மற்றும் கனடாவில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், சில புறப்பாடுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

Related posts

கூட்டுறவு வீடுகளை உருவாக்க Liberal அரசாங்கத்தினால் $1.5B திட்டம் அறிவிப்பு

admin

சிங் தனது வார்த்தைகளை பயன்படுத்தும் பழமைவாத நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரானவர்

admin

Newmarket இல் துப்பாக்கிகள், போதைப்பொருள்கள் போலீசாரால் கைப்பற்றல் – 3 சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு

admin