கனடா செய்திகள்

Newmarket இல் துப்பாக்கிகள், போதைப்பொருள்கள் போலீசாரால் கைப்பற்றல் – 3 சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு

April 19, வெள்ளிக்கிழமை அன்று Newmarket மற்றும் Richmond Hill இல் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மூன்று சகோதரர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் cocaine, fentanyl போன்ற சட்டவிரோத போதைப்பொருட்கள் பொலீசாரால் கைப்பற்றப்பட்டன.

York பிராந்திய காவல்துறை அதிகாரிகளால் சந்தேகத்திற்கிடமான ஓட்டுநர் ஒருவர் சிறிய அளவிலான cocaine போன்ற போதைப்பொருட்களை வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து $60,000 மதிப்புள்ள 12 நீளமான துப்பாக்கிகள், நான்கு கைத்துப்பாக்கிகள் மற்றும் இரண்டு நீட்டிக்கப்பட்ட சஞ்சிகைகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.

துப்பாக்கிகளை வைத்திருந்தமை, பல்வேறு வகையான போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் கடத்தல் குற்றங்கள் உள்ளிட்ட பெரும்பாலான குற்றச்சாட்டுகள் Newmarket இனைச் சேர்ந்த Marcus Borowski (வயது 25) மீது சுமத்தப்பட்டுள்ளன. Richmond Hill இனைச் சேர்ந்த இவரது சகோதரர்களான Matthew Borowski (வயது 23) மற்றும் Joshua Borowski (வயது 27) ஆகியோர் துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களை கவனக்குறைவாக சேமித்து வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

Related posts

கனடாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் எதுவும் Gaza இற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை – Joly தெரிவிப்பு

admin

Pablo Rodriguez அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தமையால் Trudeau Liberals இற்கு மேலும் சேதம் ஏற்பட்டது

admin

கனேடிய iphone பாவனையாளர்களுக்கான செய்தி!

Editor