Waterloo இல் தொடங்கிய ஆயுத விசாரணையின் ஒரு பகுதியாக Waterloo பிராந்திய போலீசார் 200 துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.
Weber Street North மற்றும் Bridgeport Road East வெள்ளிக்கிழமை இரவு 7.20 மணியளவில் போக்குவரத்து விதிமீறலுக்காக வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் கூற்றுப்படி, போக்குவரத்து நிறுத்தத்தின் போது வாகனத்திற்குள் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருப்பதை அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
இதன் போது Guelph ஐச் சேர்ந்த 39 வயதுடைய ஓட்டுநர் கைது செய்யப்பட்டதுடன், தடைசெய்யப்பட்ட ஆயுதத்தை கொண்டு சென்றதாகவும், கைத்துப்பாக்கியை கவனக்குறைவாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். இச் சம்பவத்தின் போது வாகனத்தில் இருந்து 17 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக Guelph இன் Victoria Road North பகுதியில் உள்ள ஒரு இல்லத்தில் சனிக்கிழமையன்று போலீசார் தேடுதல் ஆணையை முடித்தனர்.