கனடா செய்திகள்

கனடாவின் பெரும்பான்மையான குடியிருப்பாளர்கள் வரையறைகளிற்கு உட்பட்டு புலம்பெயர்ந்தோரை அனுமதிக்கின்றனர் – CityNews poll

கனடாவின் நான்கு முக்கிய நகரங்களில் வசிக்கும் பெரும்பான்மையான குடியிருப்பாளர்கள் புலம்பெயர்ந்தோரை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க விரும்புவதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு வெளிப்படுத்துகிறது, இருப்பினும் கிட்டத்தட்ட பாதி பேர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரவேற்கப்படும் குடியேற்றவாசிகளின் அளவைக் குறைப்பதைத் தெரிவு செய்தார்கள். கூடுதலாக Toronto, Calgary, Edmonton மற்றும் Vancouver வசிப்பவர்களில் 22% பேர் எதிர்காலத்தில் புதிய விண்ணப்பதாரர்களுக்கான கதவை முழுமையாக மூட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

பொருளாதார குடியேற்றவாதிகள், sponsored குடும்ப வர்க்கம், சர்வதேச மாணவர்கள், தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அகதிகள்/பாதுகாக்கப்பட்ட நபர்கள் ஆகிய ஐந்து குடியேற்ற விண்ணப்பங்கள் மாத்திரம் தற்போது வதிவிடத்திற்காக பரிசீலிக்கப்படுகின்றன.

இதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவர்களை வரிசைப்படுத்துமாறு கேட்டபோது, குடியிருப்பாளர்கள் சர்வதேச மாணவர்களை 49 சதவீதத்துடன் முதலிடத்திலும், அகதிகள் 47 சதவீதத்திலும், தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் ஸ்பான்சர் செய்யப்பட்ட குடும்பம் 45 சதவீதத்திலும் உள்ளனர். இதில் 23 சதவீதம் பேர் ஸ்பான்சர் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வாக்களித்தனர்.

Liberal அரசாங்கம் சமீபத்தில் குறைந்த ஊதிய தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை தடுக்க கடுமையான விதிகளை மீண்டும் கொண்டுவருவதாக அறிவித்தது. 2019 இல் 98,025 ஆக இருந்த தற்காலிக வெளிநாட்டு பணியாளர் அனுமதிகள் 2023 இல் 88% அதிகரித்து 183,820 ஆக உள்ளதாக Refugees and Citizenship Canada இன் பொது தரவுகள் தெரிவித்துள்ளன.

Related posts

முன்னாள் Liberal அமைச்சரவை அமைச்சரும் எம்.பி.யுமான Jim Peterson அவரது 82 வயதில் காலமானார்

admin

இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இரண்டு நாடுகளுக்கான சாத்தியம் அதிகரித்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

Editor

கனமழையால் GTA முழுவதும் ஏற்ப்பட்ட பாரிய வெள்ளம்

admin