Lebanon மற்றும் France இன் சகாக்களை Francophonie உச்சி மாநாட்டில் சந்திக்கவுள்ளதாக கனடாவின் வெளியுறவு மந்திரி Mélanie Joly வியாழனன்று கூறினார். இதனை அடுத்து பிரதம மந்திரி Justin Trudeau மற்றும் Joly ஆகியோர் வியாழன் பிற்பகுதியில் Francophonie இற்காக France இனை சென்றடைந்தனர்.
கனடாவும் மற்ற G7 நாடுகளும் ஒரு வார இறுதியில் மீண்டும் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அதில் ஈரானில் இருந்து இஸ்ரேலுக்குள் சரமாரியாக ஏவுகணைகள் வீசப்பட்டன. மேலும் இஸ்ரேலிய இராணுவம் தெற்கு Lebanon இற்கு நகர்ந்ததால் ஒரு தரைப் போரின் தொடக்கமும் உருவாகியுள்ளது.
ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு முன்பு கனடா Lebanon இல் உள்ள தனது குடிமக்களுக்கு Beirut இல் இருந்து வெளியேறும் வணிக விமானங்களில் இருக்கைகளை ஒதுக்கியது. மேலும் வியாழன் Istanbul இற்கு பறக்கும் மூன்று விமானங்களில் மேலும் 654 இருக்கைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், வார இறுதியில் புறப்படும் வணிக விமானங்களில் சுமார் 900 இருக்கைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன, இருப்பினும் அந்த இருக்கைகள் அனைத்தும் நிரப்பப்படவில்லை என்றும் Joly கூறினார்.
Francophonie இன் பொதுச் செயலாளர் Louise Mushikiwabo செப்டம்பர் 27 அன்று வெளியிட்ட அறிக்கையானது, Lebanese மக்களுடன் francophone குடும்பத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தியதுடன், மோதலுக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காண அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் நடக்கும் Francophonie உச்சிமாநாடு, Villers-Cotterêts மற்றும் Paris இல் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும். இவ் மாநாட்டில் Francophonie இன் உறுப்பு நாடுகளான Haiti மற்றும் Lebanon ஆகிய இரண்டு நாடுகளில் நிலவும் நெருக்கடிகள் பற்றிய விவாதம் முக்கியத்துவம் செலுத்தும்.
மேலும் Haiti இல் செப்டம்பர் 30 அன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிக்கையில் நாட்டின் 11 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையில் பாதிப் பேர் பட்டினியின் நெருக்கடி நிலைகளை அனுபவித்து வருகின்றனர் அல்லது Port-au-Prince தலைநகர் மற்றும் அதற்கு அப்பால் கும்பல் வன்முறையால் மக்களின் வாழ்க்கை திணறடிக்கப்படுவதாக தெரிவிக்கின்றது.
தலைவர்கள் இம் மாநாட்டின் போது பிரெஞ்சு மொழியை ஊக்குவிப்பது, புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்வது, மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலித்தல் மற்றும் நாடுகளுக்கு இடையே பொருளாதார உறவுகளை அதிகரிப்பது போன்ற வழிகளை விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.