கனடா செய்திகள்

Oshawa உணவகத்தின் முன்னாள் manager மீது ஊழியர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு

Oshawa இனைச் சேர்ந்த முன்னாள் உணவக manager தனது ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

March 2024 இல் இரண்டு முன்னாள் ஊழியர்கள் தங்கள் மேலாளர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி முன்வந்ததை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.

ராம் என அழைக்கப்படும் சந்தேக நபர் 33 Taunton Road West இல் அமைந்துள்ள One Eyed Jack’s உணவகத்தில் பணிபுரிந்ததாகவும் தற்போது Greater Toronto அல்லது New Hamburg/Kitchener பகுதிகளில் உள்ள உணவகங்களில் பணி புரியலாம் என்று போலீசார் குறிப்பிட்டனர்.

வியாழனன்று, Oshawa இனைச் சேர்ந்த 38 வயதான ஜெயராம் சிவஞானசுந்தரம் மீது மூன்று பாலியல் வன்கொடுமைகள் மற்றும் இரண்டு பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Related posts

இறுக்கமான சந்தை நிலவரத்தினால் வீட்டு விற்பனை பெறுமதி உயர்வு

Editor

Toronto வில் குடும்ப மருத்துவர்களுக்கு பற்றாக்குறை;

Editor

கடல் வழித்தடத்தின் ஊடாக காஸாவிற்கு மனிதாபிமான உதவி வழங்கும் முயற்சியில் கனடா இணைந்துள்ளது;

Editor