கனடா செய்திகள்

கனடா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவில் ஏற்ப்பட்ட பதற்றம் விசா விண்ணப்பதாரர்களை நிச்சயமற்றதாக்குகிறது

கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவதால் இவ் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், விசா விண்ணப்பதாரர்கள் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

திங்களன்று கனடாவும் இந்தியாவும் தங்கள் தூதரகப் பணிகளைக் கணிசமாகக் குறைத்தபோது கவலை அதிகரித்தது. மேலும் கனேடிய அரசாங்கம் தனது இராஜதந்திரிகளைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்ப முயற்சிப்பதாகக் கூறுவதற்கு எதிர்வினையாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

immigration consultant ஆக இரண்டு தசாப்தங்களாக நிபுணத்துவம் பெற்ற Kuldeep Bansal, இராஜதந்திர வெளியேற்றம் உடனடி மற்றும் பெரிய செயலாக்க தாமதங்களை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளார். மேலும் இவ் தாமதங்கள் சுற்றுலா விசாக்களை மட்டுமல்ல்லாமல், பணி அனுமதி, மாணவர் விசாக்கள் மற்றும் வாழ்க்கைத் துணை விண்ணப்பங்களையும் பாதிக்கும் எனக் கூறினார். அத்தோடு கனடாவில் கல்வி கற்கும் இந்திய மாணவர்களுக்கும், கடந்த ஜனவரியில் சர்வதேச மாணவர் விசாக்கள் இரண்டு வருட காலத்திற்குக் குறைக்கப்பட்டதை அடுத்து, இப்போது மற்றொரு தடையை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சீக்கிய பிரிவினைவாதி Hardeep Singh Nijjar இன் படுகொலையில் இந்தியாவின் தொடர்பு குறித்து கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக கனடாவின் கூற்றுக்கள் இந்திய குடிமக்களுக்கான விசா சேவைகளை கிட்டத்தட்ட எட்டு வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு வழிவகுத்ததை அடுத்து இவ் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களைச் செயல்படுத்தும் இந்தியக் குடியேற்றவாசிகளுக்கான சிறந்த இடமாக கனடா உள்ளது. அமெரிக்கக் கொள்கைக்கான National Foundation இன் தரவுகளின்படி, 2013 மற்றும் 2023 க்கு இடையில் இந்திய குடியேற்றத்தில் தோராயமாக 326 சதவீதம் அதிகரித்துள்ளது.

Related posts

அடுத்த ஆண்டுக்கு முன் federal election இனை நடத்த வேண்டும் என்ற கனடாவின் விருப்பம் பிளவுபட்டுள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவிப்பு

admin

இன்று சில கனேடிய குடும்பங்கள் ஒரு குழந்தைக்கு $620 வரை பெற்றுக்கொள்வார்கள்

admin

கனடா அணுசக்தி எதிர்காலத்திற்கான வரைபடத்தை உருவாக்குகிறது – அமைச்சர் தெரிவிப்பு

admin