Liberal நிர்வாகத்தை கவிழ்க்க அவரது கட்சி வரும் ஆண்டில் வாக்களிக்கும் என Federal NDP இன் தலைவர் Jagmeet Singh தெரிவித்தார். மேலும் அவர் இது கூட்டாட்சித் தேர்தலைத் தூண்டும் என்றும், நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வில் NDP நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் என்றும் கூறினார்.
Conservatives மற்றும் Bloc Quebecois இருவரும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா வாக்களிக்க புதிய ஜனநாயகக் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர், ஆனால் செப்டம்பர் முதல் மூன்று நம்பிக்கை வாக்கெடுப்புகளில் NDP ஆனது Liberals இற்கு ஆதரவளித்துள்ளது.
வெளியேறிய மற்றும் அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டோம் என தெரிவித்த அமைச்சர்களை மாற்றி வெள்ளி அன்று தனது அமைச்சரவையை மாற்றியமைத்தார்.