கனடா செய்திகள்

சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் கனடா கரிசனை கொள்ள வேண்டும்

சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் கனடா தீவிரமாக உள்ளது என்பதை Donald Trump இற்கு காட்டுவதற்கு கனேடிய அரசாங்கம் அமெரிக்க எல்லைக்கு அதிகமான அதிகாரிகளை அனுப்ப வேண்டும் என கியூபெக்கின் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் செவ்வாயன்று கூறினார்.

கனடா Swanton எனும் பகுதியில் தனது கவனத்தை செலுத்த வேண்டும் என François Bonnardel செய்தியாளர்களிடம் கூறினார்.

2024 ஆம் ஆண்டில் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 26,000 சட்டவிரோத கடவுச் சீட்டுகளில் 19,000 Swanton பகுதிக்குரியவை. எனவே வரும் மாதங்களில் இந்த சட்டவிரோத குடியேற்றத்தில் சரிவு இருப்பதை அமெரிக்கர்களுக்கு காட்ட இந்த துறையில் 80 சதவீத முயற்சிகளை செலுத்த வேண்டுமென்றார்.

மத்திய அரசு எல்லைப்பாதுகாப்பை மேம்படுத்தா விட்டால் கனடாவின் ஏற்றுமதிகளுக்கு வரிகளை விதிக்கவுள்ளதாக Trump அச்சுறுத்திவருகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்த ஆண்டு திருடப்பட்ட 2,000 வாகனங்கள் Border agency இனால் மீட்பு

admin

ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் Toronto இன் தெருக்கள் தாக்கப்பட்டது

admin

தட்டம்மை நோய் பரவல் தீவிரம்;

Editor