கனடா மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் என்ற Trump இன் அச்சுறுத்தலுக்கு எதிராக கனேடியர்கள் அனைவரும் ஒன்றாக அணிதிரள வேண்டுமென Doug Ford கூறினார்.
ஜனாதிபதி Trump பதவியேற்ற ஒருவாரத்தில் விடயங்கள் மாறும் என்பதுடன் இந்த வரிகளுடன் அவர் முன்னேறினால் கனேடியர்கள் ஒன்றுபட்டு எழுந்துநின்று எதிராக குரல் எழுப்புவதற்கு இது ஒரு பொருத்தமான தருணம் என்று அவர் கூறினார்.
மேலும் எமது பொருளாதாரத்தை யாராவது அழிக்க நினைத்தால் அவர்களுக்கு ஒரு செய்தியை நாம் அனுப்பவேண்டும் இல்லையெனில் அது கனேடியர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்றார்.