கனடா செய்திகள்

கனடாவின் வேலையின்மை விகிதம் மார்கழி மாதத்தில் 5.8% ஆல் நிலையாக உ‌ள்ளது.

கனடா புள்ளிவிவர திணைக்களம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கனடாவில் வேலையின்மை விகிதம் 5.8 சதவீதமாக நிலையாக இருந்ததால், December மாதத்திற்கான மொத்த வேலைகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

2023 இன் இறுதி மாதத்தில் நிறுவனம் வெளியிட்ட மாதாந்த தொழிலாளர் பொருளாதார கணக்கெடுப்பில் மொத்தமாக 100 வேலைகளைச் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.

December மாதத்தில் 23,500 ஆக குறைவடைந்த Full-time வேலைகளின் எண்ணிக்கையானது 23,600 part-time வேலைகளின் இலாபத்தால் ஈடுசெய்யப்பட்டுள்ளது.

Professional jobs,scientific jobs, தொழில்நுட்ப சேவைகள் துறையில் வேலைகளின் எண்ணிக்கை மாதத்தில் 45,700 ஆக உயர்வடைந்துள்ளது. அதே நேரம் Health care மற்றும் social assistance வேலைகளின் எண்ணிக்கை 15,500 ஆல் உயர்ந்துள்ளது.

Whole sale and retail துறையில் December மாதத்தில் 20,600 பேர் வேலையை இழந்துள்ளனர்.
அத்துடன் விவசாயத் துறையில் 17,700 பேர் வேலை இழந்துள்ளனர், Manufacturing jobs (உற்பத்தி வேலைகளின்) எண்ணிக்கையும் 18,300ஆல் குறைந்துள்ளது.

நவம்பர் மாத 4.8 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் மாதத்தின் சராசரி மணிநேர ஊதியமானது ஆண்டு அடிப்படையில் 5.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு வளர்ச்சியில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் கனடாவின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

Taiwan இல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கனேடிய, சீன பாதுகாப்பு அமைச்சர்கள் சிங்கப்பூரில் சந்திப்பு

admin

Montreal துறைமுகத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட கார்கள் மீட்பு – GTA இலிருந்து திருடப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு

admin

கனேடிய,வேலையின்மை விகிதம் 5.8% ஆக உயர்வு;

Editor