கனடாவின் முன்னாள் துணைப்பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland லிபரல் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் புதிய முறைமையுடன் கூடிய காபன் வரிக்கொள்கையை மாற்றியமைப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
January 20 ஆந் திகதி அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்புக்கு முன்னர் லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் தனது விருப்பத்தை முன்னாள் நிதியமைச்சர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.