அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இன் வரி அச்சுறுத்தலை எதிர்கொள்ள அடுத்த மாதத்திற்குள் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்சியாக கோரி வருகின்றன ஆனால் அமெரிக்க வரிக்கெதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்றவேண்டிய தேவை இல்லை என தற்போதைய அரசாங்கம் கூறுகின்றது.
கண்டத்தையே வர்த்தகப் போருக்கு இட்டுச் சென்றிருக்கக்கூடிய அமெரிக்காவின் வரி விதிப்பு திட்டமானது கனடாவின் எல்லைப்பாதுகாப்பு பற்றிய திட்டத்தை கனேடிய பிரதமர், Trump இற்கு விளக்கியதைத் தொடர்ந்து குறைந்தது March 04 ஆந்திகதி வரை தாமதப்படுத்த ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
March 24 ஆம் திகதி திட்டமிடப்பட்டதை விட முன்னதாக அரசாங்கம் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியமில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் David McGuinty கூறினார்.
லிபரல்கள் தங்கள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க நேரம் ஒதுக்குவதற்காக January 06 ஆம் திகதி Trudeau நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார், March 09 ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதான எதிர்கட்சிகள் இணைந்து தற்போதுள்ள சிறுபான்மை அரசாங்கத்தை எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக கூறிவரும் நிலையில் சட்டமாற்றங்கள் தேவைப்படும் விடயங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைப்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.
ஆனாலும் March 04 அன்று கட்டணங்கள் வந்தால் கனேடியர்களுக்கு உதவ அவசர உதவித் திட்டத்தை நிறைவேற்ற லிபரல்களுடன் இணைந்து பணியாற்ற புதிய ஜனநாயகக் கட்சி தயாராக இருக்கும் என்று NDP தலைவர் Jagmeet Singh கூறியுள்ளார்.