கனடா செய்திகள்

தேர்தல் களங்களில் லிபரல் தலைமைத்துவ வேட்பாளர்கள் அள்ளி வழங்கும் பாதுகாப்பு உறுதிமொழிகள்

Chrystia Freeland மற்றும் Karina Gould ஆகியோர் கனடாவின் இராணுவச் செலவினங்களை 2027 ஆம் ஆண்டுக்குள் மொத்த தேசிய உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இரண்டு சதவீதத்திற்கு சமமாக உயர்த்துவதாக உறுதியளித்துள்ளமையானது Trudeau வின் காலக்கெடுவை விட ஐந்து வருடங்கள் குறைவானது என்பதுடன் Mark Carney இன் திட்டத்தை விட மூன்று வருடங்கள் குறைவான காலம் ஆகும்.

மேலும், கனேடிய ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு Freeland மற்றும் Gould ஊதிய உயர்வுகளையும் உறுதியளித்தனர்.வர்த்தக தீர்ப்பாய மேற்பார்வையிலிருந்து பாதுகாப்பு பெறுகை நடைமுறைகளை விலக்குவதாகவும், கனடா இலக்கை அடையும் வரை அனைத்து பாதுகாப்புப் பெறுகை நடைமுறைகளுக்கும் “Urgent Operational Requirement” விலக்கைப் பயன்படுத்துவதாகவும் Freeland கூறினார். அத்துடன் கொள்முதலை விரைவுபடுத்துவதற்கான சாதாரண விதிகளையும் அவர் நிராகரித்தார்.

இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் கனடா NATO வின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் என Carney உறுதியளித்து ஒரு நாள் கடந்துள்ள நிலையிலேயே Freeland இன் இந்த உறுதிமொழிகளும் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் Carney எந்த திட்டத்தையும் சமர்ப்பிக்கவில்லை.

NATO அங்கத்துவ நாடுகள் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% பாதுகாப்பு செலவினங்களுக்காக செலவிட வேண்டும் என கூறும் Donald Trump அமெரிக்கா அவ்வளவு செலவு செய்யவில்லை என்பதை மறைக்கிறார். அத்துடன் அதிருப்தியடைந்துள்ள அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களை திருப்திப்படுத்த இரண்டு சதவீதம் இன்னும் போதுமானதாக இருக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனேடிய பாதுகாப்பு அமைச்சர் Bill Blair கூறுகையில், Washington இல் இருந்து வந்த அழைப்பின் பேரில் ஒன்றுகூடிய கனேடிய அதிகாரிகள் செலவுக்கால அளவினை எவ்வாறு விரைவுபடுத்துவது என பல மாதங்களாக ஆராய்ந்து வருகின்றனர் என்றும் அரசாங்கம் வாங்குவதற்கு சிந்திக்கும் F-35 போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற பெரிய அளவிலான கொள்வனவுகளை மேற்கொள்ள இன்னும் காலம் தேவைப்படும் என்றும் கூறினார்.

Related posts

கனடாவுக்கான தூதுவராக முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் Pete Hoekstra இனை Trump நியமித்தார்

admin

2024 கணக்கெடுப்பில் AI இற்காக $2.4 பில்லியன் முதலீடு – Trudeau அறிவிப்பு

admin

கனேடியர்களின் கடவுச்சீட்டுக்களை இணையவழியில் புதுப்பிப்பதாக அறிவித்திருந்த போதும் இதுவரையில் நடைமுறைக்கு உட்படுத்தப்படவில்லை.

Editor