கனடா செய்திகள்

தமிழர் ஒருவரை உள்ளடக்கிய Ontario அமைச்சரவை நியமிக்கப்பட்டது

Ontario வில் தொடர்சியாக மூன்றாவது.பெரும்பான்மையை வென்ற Doug Ford மூன்று வாரங்களின் பின்னர் தனது புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார். ஆளுநர் Edith Dumont முதல்வர் மற்றும் அவருடைய அமைச்சர்களுக்கு புதன்கிழமை Royal Ontario Museum இல் நடைபெற்ற விழாவில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இம்முறையும் 37 பேர் Ford இன் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.

அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் இல்லாத போதும் சில பதவிகளில் மாற்றங்கள் உள்ளன. முன்னர் வீட்டுவசதி அமைச்சராக இருந்த Paul Calandra இப்போது கல்வி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான Rob Flack, Todd McCarthy,Jill Dunlop ஆகியோரின் அமைச்சுப் பதவிகளும் மாற்றப்பட்டுள்ளது.

தமிழரான விஜய் தனிகாசலம் சுகாதார அமைச்சின் உளநலத்துறையின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். Greenbelt நில அபகரிப்பு ஊழலைத் தொடர்ந்து பதவியை இராஜினாமா செய்த முன்னாள் வீட்டுவசதி அமைச்சர் Steve Clark அமைச்சரவைப் பதவி இல்லை என்றாலும் தொடர்ந்தும் அரசாங்க அவைத் தலைவராக செயற்படவுள்ளார். Ford தனது தலைமைக் குழுவை அதிகம் மாற்றப் போவதில்லை என்று முன்கூட்டியே வெளிப்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Ford இன் அமைச்சரவை அறிமுகத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் Marit Stiles இதுபோன்றவற்றுக்கு இது நேரமில்லை என விமர்சித்தார். Ontario வின் NDP தலைவரும் அதே அமைச்சரவையே மீண்டும் பதவியேற்றுள்ளதாக போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு போன்ற அமைச்சுக்களை சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.

Ontario வின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக NDP தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் 44வது அமர்விற்காக April 14 அன்று Ontario நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படவுள்ளது.

Related posts

நேரமின்மை காரணமாக Liberal தலைமைக்கு போட்டியிட போவதில்லை என MacKinnon தெரிவிப்பு

admin

கனடாவின் வருடாந்திர புதைபடிவ எரிபொருள் வெளியேற்றத்தை விட 2023 காட்டுத்தீ உமிழ்வுகள் நான்கு மடங்கு அதிகம்

admin

Bank of Canada இடமிருந்து விகிதக்குறைப்பை எதிர்பார்த்தாலும் அதன் வேகம் குறைவாகவே இருக்க வேண்டும்!

canadanews