கனடா செய்திகள்

April 28 பொதுத் தேர்தல் 2025

பிரதமர் Mark Carney 44 ஆவது நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு உத்தியோகபூர்வமாக ஆளுநரை சந்தித்த பின்னர் அநேகமாக April 28 கனேடியர்கள் வாக்களிக்க வேண்டிய நாளாக இருக்கும் இதன் மூலம் கனடாவில் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த சிறுபான்மை அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகின்றது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நேரத்தில் Liberal கட்சியினர் 153 ஆசனங்களையே கொண்டிருந்தனர். March 09 ஆந் திகதியன்று Trudeau இற்கு பின்னர் Liberal தலைவராக Mark Carney தேர்ந்தெடுக்கப்பட்டு on March 14 அன்று தனது புதிய அமைச்சரவையுடன் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளாக Liberal கட்சியின் சார்பில் Chandra Arya போட்டியிட்டு வெற்றி பெற்ற அதே தொகுதியிலிருந்து இம்முறை Carney போட்டியிடவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Carleton இல் மறுதேர்தலை எதிர்பார்க்கும் தனது முக்கிய போட்டியாளரான Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre அருகில் Carney இம்முறை போட்டியிடுவார். அமெரிக்க பொருளாதார அச்சுறுத்தல்களுக்கு வலுவான பதிலை வழங்குதல், Conservative கட்சியை எதிர்கொள்ளல், கனடாவை ஒன்றிணைத்தல் போன்றவற்றுக்கு தேவையான ஆணையை மக்களிடமிருந்து பெற்றக்கொள்வதற்காகவே தேர்தலை நடத்தவுள்ளதாக Carney கூறுகிறார்.

மறுமுனையில், நான்காவது முறையாக பதவியேற்க ஆசைப்படும் Liberal கள் Justin Trudeau வின் தலைமை பதவிக்கு அவரது பொருளாதார ஆலோசகரான Carney ஐ வைத்து மாற்றீடு செய்துள்ளதாகவும், தனது ஆட்சியில் வலுவான இராணுவத்தைக் கொண்டிருக்கும் அதே வேளையில் வாழ்க்கைச் செலவையும் குறைப்பேன் என்கிறு கூறுகின்றார் Poilievre.

Related posts

Trudeau மற்றும் பிற கூட்டாட்சி தலைவர்களுக்கு online கொலை மிரட்டல்கள் விடுத்ததாக இரண்டு Albertans மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

admin

தலிபான்களின் பிடியிலிருந்து விடுபட்ட கனேடிய ஆயுதப்படை வீரர்

canadanews

Trump இன் திட்டம் March 4ஆந் திகதி அமுலுக்கு வரும்

canadanews