March 7 ஆந் திகதி Markham நகரில் Solace வீதியில் உள்ள வீடொன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு, 2018 ஆம் ஆண்டு முதல் ஐந்து தனித்தனி சந்தர்ப்பங்களில் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இருவர் அவசர சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் காயமடைந்த இருவரில் 20 வயதுடைய Nilakshi Raguthas என்ற தமிழ் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 26 வயதுடைய மற்றைய ஆண் உயிராபத்தான காயங்கள் எதுக்கும் உள்ளாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நாய் ஒன்றும் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச்சூடு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 28 வயது மதிக்கத்தக்க Aekwon Murray என்பவரும் 35 வயதுடைய Heshmat Rasouli-Kalantarzade என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் தொடர்ச்சியாக விசாரணையை மேற்கொண்டு வருவதுடன் மேலதிக விசாரணைக்காக அப்பகுதி பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.