கனடா செய்திகள்

Automobiles நிறுவனங்கள் தங்களது தொழிலை வேறு இடங்களுக்கு மாற்ற மாட்டார்கள்: Anita

அமெரிக்காவின் Automobile வரி காரணமாக Auto இறக்குமதிகள் மீது 25% வரி அறவிடப்படுவதன் காரணமாக நாட்டில் உள்ள Automobiles நிறுவனங்கள் தங்களது தொழிலை வேறு இடங்களுக்கு மாற்ற மாட்டார்கள் என கனடாவின் தொழில்துறை அமைச்சர் Anita Anand கூறுகிறார்.
அவர்கள் தொடர்ந்தும் கனடாவில் தங்கியிருந்து தொழில் செய்யவும் கனேடிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவும் விரும்புகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே CUSMA உடன் படிக்கையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் Automobiles மீதான வரிகள் குறித்து அமெரிக்கா இதுவரை எதுவித தெளிவான முடிவுகளையும் எடுக்கவில்லை ஆயினும் CUSMA-விற்கு இணங்காத அனைத்து அமெரிக்க வாகனங்களுக்கும் கனடா 25 சதவீத வரிகளை விதிக்கும் என்று பிரதமர் Mark Carney வியாழக்கிழமை அறிவித்துள்ளார். கனடாவின் வரிகள் Auto பாகங்களைப் பாதிக்காது என்றும் அவை மெக்சிக்கோவிலிருந்து வரும் வாகனங்களுக்கும் பொருந்தாது என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவிற்கு வெளியே உள்ள Automobiles துறையை அமெரிக்காவிற்குள் கொண்டு வரும் திட்டத்தில் தனது கட்டணங்களை Trump நியாயப்படுத்த முனைவதாக குற்றம் சாட்டியுள்ள கனேடிய தொழில்துறை அமைச்சர் கனேடிய அரசாங்கம் எப்போதும் Auto உற்பத்தியாளர்களுக்குத் துணையாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.

வாகன உற்பத்தியாளர்கள் கனடாவில் தங்கள் தொழிலைத் தொடரும் வரை அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் ஒரு நிவாரண கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கும் எனவும் Anand கூறினார். இதே நேரத்தில் கடன்களை வழங்குவது இக்கட்டமைப்பின் ஒரு பகுதி இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

பணவீக்கம் காரணமாக BoC இந்த வாரம் அதிகப்படியான விகிதக் குறைப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Canadatamilnews

கனடாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் எதுவும் Gaza இற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை – Joly தெரிவிப்பு

admin

Conservatives மூலதன ஆதாய வரி சீர்திருத்தங்களுக்கு எதிராக உள்ளனர்

admin