இரண்டு குழந்தைகளுக்கு தாயான கிம் புருனோ ஒரு ரியல் எஸ்டேட் முதலீட்டாளர். இவர் விலங்கு நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சொந்த சேவை நிறுவனம் ஒன்றையும் நடாத்திவருகின்றார்.மேலும் மாண்ட்ரீலில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் பணிபுரிகின்றார்.
இவர் ஒரு சான்றளிக்கப்பட்ட மூழ்காளர் ஆவார். குறிப்பாக, AIDA நிலை 3, Deep diving, Master diving ஆகிய சான்றிதழ்களை பெற்றவர்.
இந்த மாத தொடக்கத்தில் இவர் ஆழமான நீருக்கடியில் மாடல் போட்டோஷூட்டுக்களை மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
டிசம்பர் 5 அன்று, புருனோ மற்றும் ஓயார்சுன் (captain) மற்றும் பாதுகாப்பு மூழ்காளர் ஸ்டீபன் நிக்சன், எடுவார்டோ பாண்டோஜா ஆகியோருடன், பஹாமாஸ் எனும் நாசாவில் உள்ள வர்த்தக கடல் சிதைவுக்குச்சென்று அங்கு புருனோவின் பன்னிரெண்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.
இக்குழு டைவிங் கியர் வைத்திருந்தபோதும் புருனோ தனது diving திறமையை பயன்படுத்தினார், மேலும் தேவைக்கேற்ப ஒரு வாயுத்தாங்கியும் ரெகுலேட்டர் உம் வழங்கப்பட்டது.
அந்த ஆழத்தில், ஒன்பது நிமிடங்கள் மட்டுமே செல்ல முடியும். இல்லையெனில் தொட்டிகளில் உள்ள நைட்ரஜனின் காரணமாக மேற்பரப்புக்கு வந்தவுடன் decompression நோய் உருவாகலாம்.
சூப்பர்-ஆக்ஸிஜனேற்றப்பட்ட காற்றின் கலவையான நைட்ராக்ஸின் தொட்டியுடன் 30 மீட்டர் கீழே இறங்கிய பிறகு,கடைசி 10 மீட்டர் நிக்சனின் எமர்ஜென்சி ரெகுலேட்டர் இணைக்கப்பட்டது.
கீழே இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் முகமூடியை அகற்றி, மூச்சைப் பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்தார்.நிக்சன் அவருக்கு தேவையான ஆக்ஸிஜனைக் கொடுக்க நீந்துவார்.
40 மீட்டர் ஆழத்தில் சில புகைப்படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் படிப்படியாக மேலேறி அதிக புகைப்படங்களை எடுத்தனர்.
இதுதொடர்பில் புருனோ கூறுகையில்”இது உருவாக்கிய நினைவுகள் அருமை” என்று கூறினார். மேலும் நான் இரண்டு வருடங்களாக மாடலிங் செய்துள்ளேன், ஆனால் இவை காவியம் என்றுகூறினார். மேலும் இது போன்ற இலக்கை தான் அடைய விரும்புவதாகவும் கூறினார்.